சகிப்பு மனங்கொண்டோர் சங்கடங்கள் பாரார் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சகிப்பு மனங்கொண்டோர் சங்கடங்கள் பாரார்;
நெகிழ்வை யுளம்வைத்து நித்தம் – புகழோங்கப்
புன்னகை செய்தபடி போற்றுவார் போற்றட்டும்
என்றுசொல்வார் நெஞ்சம் இனித்து!
- வ.க.கன்னியப்பன்