ஏகமாய் ஓர விழிப்பார்வை காட்டுவாய் ஏந்திழையே - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
மேகத்தின் மீது மிதந்தெங்கும் செல்கிறேன் மின்னலென
மோகத்தின் இன்பமும் மொய்குழல் வண்டாய் முழங்கிநின்றேன்
தேகத்தி னின்பமாய்த் தேன்சுவை பெற்றதாய்த் தேர்ந்துநின்றேன்
ஏகமாய் ஓர விழிப்பார்வை காட்டுவாய் ஏந்திழையே!
- வ.க.கன்னியப்பன்