நற்செயல்
நற்செயல்
காலம் கடந்ததால் அழியாதது
கண்ணீர் வழிந்ததால் கரையாதது
கடமை முடிந்ததால் மறையாதது
காசினால் மதிப்பிட முடியாதது
நேரத்தினால் அளக்க முடியாதது
வரம்பினால் அடக்க முடியாதது
உள்ளத்தால் மட்டுமே அறியப்படுவது
உண்மை அன்பினால் உருவாகியது
மனித இனத்தினால் உணரப்படுவது
மாநிலத்தோரால் என்றும் போற்றப்படுவது
காலமறிந்து நாம் செய்யும் நற்செயலே.