விலகி விட்டேன் -சகி

உனக்காக ஊரை
விட்டு உறவுகளை விட்டு

என் கனவுகளை தொலைத்து
இனி என் உலகமே

நீ மட்டுமே என்று
கரம்பிடித்தேன்...

என் வலிகள்
புரியவில்லை....

என் கண்ணீர்
துளிகள் தெரியவில்லை....

கட்டியவளை விட
உன் கள்ள காதலி
உன் இதயத்தில்
குடியிருக்க....

விலகிவிட்டேன்
உன்னிடமிருந்து
மொத்தமாக....

என் காதலோ
அன்போ உன்னை
தொடர போவதில்லை....

உன் எண்ணம்
போலவே வாழ்த்திடு...

வாழ்த்துகிறேன்....

மடிந்து விட்டது
என் காதல்....

என்னுடனே...

எழுதியவர் : சகி (6-May-23, 3:30 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 1020

மேலே