அன்பே வா அருகிலே 555

***அன்பே வா அருகிலே 555 ***


ப்ரியமானவளே...


நாம் சேர்ந்து

ரசித்த கடல் அலைகள்...

சேர்ந்து
ருசித்த சோளம்...

சேர்ந்து
பயணித்த பேருந்து...

உன் மடியில் நான்
தலை சாய்த்த பூங்கா...

உன் வீட்டில் நீயும்
என் வீட்டில் நானும்...

சேர்ந்து
ரசித்த பௌ
ர்ணமி...

இன்றுவரை
எதுவும் மாறவில்லை...

நானும் இன்றுவரை
மாறவில்லை...

எல்லாம் ரசிக்கிறே
ன்
தனிமையில் நீ இல்லாமல்...

கைபேசி என்னை மாற்றி கொண்டு
என்னை கலங்க வைத்தவளே...

உன்னருகில் நான் இல்லாததை
நீ தேடவில்லையா...

என்னோடு
நீ பேச
உனக்கு தோன்றவில்லையா...

எதற்கு
இந்த மௌனம்...

ஒரே ஒரு நலம் சொல் எனக்
கு
போதும் நீ நலம் என்று...

என்றும் உன்
நலம் விரும்பும் உன்னவன்.....


***முதல்
பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (5-May-23, 8:43 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 258

மேலே