அம்மாவின் அடுப்பு சமையல்

அம்மாவின் அடுப்பு சமையல்

அன்று
அம்மாவின் புல்லாங்குழல்
வாசிப்பில்
நாட்டியமாடிய நெருப்பு

நாட்டியத்தை இரசித்து
அதன் மேலே
பானை நீரில் நின்று
குதித்து நடனமாடிய
அரிசி மணிகள்

இரண்டுமே ஆடி
களைத்து போன பின்

நெருப்பின் களைப்புக்கு
தண்ணீ்ர் விட்டு
அணைத்த அம்மா

குதித்து களைத்த
அரிசியோ
நொந்து நைந்து
சோறாகி, சேறாகி
புகை விட்டு
குமுறியபடி இருக்க

ஆசுவாசப்படுத்த
தட்டில் எடுத்து
ஆற போட்டாள் அம்மா

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Nov-25, 1:43 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 4

மேலே