குழலி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : குழலி |
இடம் | : விருதுநகர் |
பிறந்த தேதி | : 28-Oct-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 210 |
புள்ளி | : 29 |
ஒரு இளம் படைப்பாளி
மனது,
கிளை நீங்கும் இலை
போல மென்மையானது ......
உளி தாங்கும் சிலை
போல வன்மையானது ......
மனது,
பாசம் பழகும்;
நேசம் நிறைக்கும்....
வலிகள் ஏற்கும்;
வேதனைகள் கற்கும்............
யுகங்களில் கலங்கிடும்!
நொடிகளில் மகிழ்ந்திடும்!
காயங்களில் கரைந்திடும்!
சிரிப்புகளில் சிலிர்த்திடும்!
கண்ணீர் கண்டு
செந்நீர் சிந்தும் !
கண்ணீர் துடைக்க
கரங்கள் நீட்டும்!
அழகிய மலரின்
மெல்லிய இதழினால்
மெல்லத் தீண்டல் பெற்றாலும்
உருகி அது உடைந்திடும்....
ஆயிரம் கணைகள்
அள்ளித் தொடுத்து
உயிரின் மூலத்தைத்
துளைத்தலும்
புன்னகையோடு
விளையாடும் ........
இதயம் நிறைக்கும்
இன்பம்
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
பாய்ந்தது ஒரு காலத்தில் ,,,,
இன்று
தமிழகத்தின்
ச(த)ரித்திர சாதனை
காவல் துணையுடன்
மதுபான நிலையம் ,,,,!
***********************************
புதியதோர் உலகை படைக்க
தமிழகத்தின் வினோத முயற்சி
'தெர்மாகோல் ஆராய்ச்சி ',,,,!
*************************************
தமிழர்களின்
தலையெழுத்து
'இலவசங்கள் ',,,,!
***********************************
அரசியல்வாதியின்
பகுதிநேர ஓய்வறை
சிறைச்சாலை ,,,!
************************************
ஊழல்களின்
பட்டப் பகலிலே
வெட்ட வெளியிலே
பெற்றோர் பிறந்தோர்
கண்ணெதிரே
நீட் என்ற பெயரில்
நீலப் படம் எடுத்த
நயவஞ்சகர்களுக்கு முன்னே
நஞ்சுண்டதை போல்
நலிந்து திரும்பிய
எம் மாணவிகளுக்கு
தமிழகம்
தரப்போகும்
பதில் என்ன?
மூன்று மணிநேரத்திற்காக
மூன்று முடுச்சுகளை
அகற்றச் சொல்லும்
முட்டாள் தனம் தான்
தமது தேர்வு முறையா?
மருத்துவத்திற்காக
எம் பெண்கள்
மாங்கல்யத்தை
தியாகிக்க வேண்டுமா?
மனதற்ற மடத்தனம்.......
பொறுத்திருப்பதால்
நாங்கள் பேடிகள் அல்ல.
அமைதி காப்பதால்
யாம் உம் அடிமைகள் அல்ல....
நெஞ்சம் குமுறுகிறது;
குருதி கொதிக்கிறது;
அல்லி மலர் தொடுத்து
அலங்கர
காதலனைக் கண்ட
கடைக்கண் பார்வையில்
வெட்கத்தில் முகம் மறைத்து
விழி மூடி இதழ் விரிக்கும்
அழகுப் பெண் போல
யாரைக் கண்ட வெட்கத்தில்
ஒளிந்து சிரித்து ஒளிர்கிறாய்?
கறை படியா பிறை நிலவே.......
நுனி விரல்த் தீண்டலின்
மறு கணத்தில் விலகிக் கொள்ளும்
காதலனின் காதலி போல்
யார் தீண்டிய கூச்சத்தில்
விலகிச் செல்கிறாய்?
கதிரவனின் கதிரொலியே...........
காணாத காதலனின்
கண் பார்த்த மறு நிமிடம்
காதலியின்
இமையோரம் மிளிரும்
சிறு துளி விழிநீர் போல்
யாரைக் கண்ட மகிழ்ச்சியில்
மின்னி மிளிர்கிறாய்?
வைர ஒளி விண்மீனே..............
1. வெளி ஆடைகளை கிழித்தும் உள்ளாடைகளை அகற்ற செய்தும் ஒரு அழுக்கான தேர்வை "நீட்" என்ற பெயரால் நடத்தியது சரியா.?
2. இந்த கெடுபிடி தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் மட்டும் ஏன் கடைபிடித்தார்கள்.?
3. உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் இந்த தேர்வு தேவையா?
மனது,
கிளை நீங்கும் இலை
போல மென்மையானது ......
உளி தாங்கும் சிலை
போல வன்மையானது ......
மனது,
பாசம் பழகும்;
நேசம் நிறைக்கும்....
வலிகள் ஏற்கும்;
வேதனைகள் கற்கும்............
யுகங்களில் கலங்கிடும்!
நொடிகளில் மகிழ்ந்திடும்!
காயங்களில் கரைந்திடும்!
சிரிப்புகளில் சிலிர்த்திடும்!
கண்ணீர் கண்டு
செந்நீர் சிந்தும் !
கண்ணீர் துடைக்க
கரங்கள் நீட்டும்!
அழகிய மலரின்
மெல்லிய இதழினால்
மெல்லத் தீண்டல் பெற்றாலும்
உருகி அது உடைந்திடும்....
ஆயிரம் கணைகள்
அள்ளித் தொடுத்து
உயிரின் மூலத்தைத்
துளைத்தலும்
புன்னகையோடு
விளையாடும் ........
இதயம் நிறைக்கும்
இன்பம்
காதலனைக் கண்ட
கடைக்கண் பார்வையில்
வெட்கத்தில் முகம் மறைத்து
விழி மூடி இதழ் விரிக்கும்
அழகுப் பெண் போல
யாரைக் கண்ட வெட்கத்தில்
ஒளிந்து சிரித்து ஒளிர்கிறாய்?
கறை படியா பிறை நிலவே.......
நுனி விரல்த் தீண்டலின்
மறு கணத்தில் விலகிக் கொள்ளும்
காதலனின் காதலி போல்
யார் தீண்டிய கூச்சத்தில்
விலகிச் செல்கிறாய்?
கதிரவனின் கதிரொலியே...........
காணாத காதலனின்
கண் பார்த்த மறு நிமிடம்
காதலியின்
இமையோரம் மிளிரும்
சிறு துளி விழிநீர் போல்
யாரைக் கண்ட மகிழ்ச்சியில்
மின்னி மிளிர்கிறாய்?
வைர ஒளி விண்மீனே..............
காலம்
முழுவதும்
நான் கண்ணீர்
சிந்த நேர்ந்தாலும்
அதன் காரணம்
நீயாக வேண்டும்............
நினைப்பது கிடைப்பதில்லை ;
கிடைப்பது பிடிப்பதில்லை;
சிலர்,
நினைவுகளை மறந்து ,
கிடைத்ததை பிடித்து கொண்டு ,
பொய்யான புன்னகையில்
வாழ்வை கழிக்கின்றனர்;
அவர்கள் வாழ தெரிந்தவர்களாம்............
சிலர்,
நினைவுகளை நிறுத்தாமல்,
நீங்காத துயரத்தோடு,
காயமான இதயத்தோடு,
காலத்தை கழிக்கின்றனர்;
அவர்கள் முட்டாள்களாம்.................
கிடைக்காத காதலை
மறவாமல் மனதில்
வைத்து வாழ்பவர்கள்
முட்டாள்கள் என்றால்,
நான் முட்டாளாகவே விரும்புகிறேன்..............
நண்பர்கள் (14)

முகருணாசபா ரெத்தினம்
திருவாரூர்

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை

சஹ்ரன் கவி
புத்தளம், ஸ்ரீ லங்கா.

இராகுல் கலையரசன்
பட்டுக்கோட்டை
