சஹ்ரன் கவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சஹ்ரன் கவி |
இடம் | : புத்தளம், ஸ்ரீ லங்கா. |
பிறந்த தேதி | : 05-Aug-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 0 |
என் எண்ணத்தில் உதிக்கும் கவி வரி உங்கள் விழிகள் கண்டு ரசித்தி ட
வலிகள் கண்டாலே மனமே கலங்காதே
உளியின் அடியிலே கல்லில் எழில் சிற்பம் மிளிருமே
துன்பம் யாவுமே சந்தோஷத்தின் முதல் கட்டமே
வெற்றி ஒன்று காணும்போது துன்பம் யாவும் தொலைந்து போகுமே
நம் நெஞ்சில் தினம் தினம் இன்பம் அலையாய் அடிக்குமே
கார் மேகப் படையெடுப்பு கண்டு வெண் திங்களும் கண் மங்கிப் போகும்
நீர்க் காகங்கள் கரு வானில் சிறகு விரிக்க தவளைத் தளைகள் வீறுகொண்டு ஆர்ப்பரிக்கும்
மாதின் குழல் போலாடும் பச்சை மரங்கள் மழைக் காதலன் கண்டு அன்புப் பூச் சொரியும்
நம்ம வான் குளம் வெள்ளை நீரை அள்ளித் தெறிக்க கெண்டை மீன்களும் விரால்
மீன்களும் ஜப்பான் குட்டிகளும் சீன வித்தை காட்டும்
இடி இசையமைக்க சினிமாக் கெமரா மின்னலொளி பிடிக்க
சின்னஞ்சிறுசுகளின் மழைக் கூத்துக் கண்டு எந்தன் இதயமும் ஆனந்தத்
தாண்டவம் ஆடும் இன்று
ஆட்டமாட நரம்பு துடிக்க ஆசை காற்று என்னுளடிக்க நாணம் தடுக்க விழிகள்
விழா பார்க்கும்
நீர்வீழ்ச்சி போல் பெய்யும் மழை பனிபூவாய் தூவும் சில தருணம்
மழை வெயில் இரவு பகலாய் வரும் நம்மூரில் திட்டித் தீர்க்கும் வியாபாரக் கூட்டம்
வீசும் மழைக் காற்றும் அடிக்கும் அனல் வெயிலும் ஏராளம் தாராளம்