அருண் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அருண் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 13-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 1043 |
புள்ளி | : 450 |
இந்த உலகினில் இறந்தாலும் பிரிக்கமுடியாத புகழ் ,எழுத்துருவிக்கும் கவிஞன் புகழ் புகழுகை தேடினும் கிடைப்பது ஏமாற்றமே. நல் கவி எழுதிடில் புகழ் பெறும் இணையத்தில் புதுக்கவி எழுதிட முனைகிறான். என்கவி வளப்படுத்திட உதவுங்கள் விமர்சனத்தால்........
என் பிளாக்கர் id https://kavinganinsinthanai.blogspot.com
ஏன் வாழ்க்கை
ஏளனம் செய்கிறது என்
ஏழ்மை நிலைகண்டா இல்லை
ஏமாளியானதை கண்டா
உன் காதல் வலைகளில்
உவப்புற்ற நாட்களெல்லாம்
உவர்ப்பாக போகும் என்று
உண்மையை மறைத்தகாமம்
இளமையின் பொழுதுகள்
இனிப்பாக முடியும் என்று
இழித்தவாயனாக பொருள்
இழந்தவனாக வாழ்க்கை 30 களில்
புலம்பல்கள் போக்கிட
புறப்பட்ட கதியற்றோ
புரவிகள் ஊமையாய்
புழுதி சாலைகள் நெடுக
புரண்டு ஓடுகின்றன சொந்த
புகலிடம் தேடி பரதேசிகளாய்
புண்முறுவலை மறைத்து பசி
புகையும் உதரத்துடன்
கைகள் கோர்த்து நடந்திட்ட
காலமெல்லாம் நனைவாகி போயிடுமோ
இடைவெளியில் செய்யும் காதல்
இணைத்திட காலம் சமைந்திடுமோ
உன்விழிப்பார்வையில்
என்விதி தொலைகிறதே
மீட்சிக்கு வழியில்லையா
ஆட்சிக்கு கனமில்லையா
பிடிகள் நழுவிட
பிரார்த்திக்கின்றேன்
பிரபஞ்சம் முழுவதும் உன்
பிரிவை தவிர்த்திட உன் கை
பிடிப்பவன் நானாக வேண்டுமென்று
படித்ததில்லை நானும் கீதை
எனக்கு நீ எந்நாளும் சீதை
பக்கம் நீ இருந்தால் பேதை
தேவையில்லை எனக்கந்த போதை
என் கவிதைகள்
காகிதகப்பலாய்
மிதப்பதேன் நீ
என் மனதின்
வெள்ளக்காடானதாலோ
உன் தொலைவில் -என்
உண்மைக்காதல் புரிந்திட்டு
ஊமையாக இருப்பதேன் -நான்
உரிமையாக காதலை சொன்னதாலோ
நீ என் முறை பெண் தானே
தத்தி திரிந்த காலம் முதலான நட்பு
தகட்டி விட்டதா காதலானவுடன்
தாரணி உன் கைகளில் நான்
தாரையாக படித்திருந்தேன்
ஜாதக பொருத்தம் பிழைத்தாலும் -என்
ஜனன உன்பாலன்பு பிழைக்காதடி
சரித்திரம் படைத்திட துடிக்கும்
சாதனை பெண்ணே உன் இயலாமை
மனதினிலும் உடலினுள்
மறைந்தில்லை நீ புரிந்து விட்டாய்
எழுந்து வா ஒரு சமூகம்
ஏணி போட்டு வானுயர்த்தும்
வலிகள் தடை போடும் மீறின் உன் புகழ்
வானம் இடைப்போடும்
இயக்கம் தடைபட்டாலும் உன்
ஈகையும் புகழும் உடனிருக்கும் நீ
கற்ற தொழில் கல்வியும் உன்
காவலாய் துணை நிற்கும்
என் காதல் ஒன்று தான் உன் துணைக்கு
தாய் தந்தை சகோதரரை தொடந்து
தரமான உறவாக உன்னை இறுதிவரை
நேசித்திட கரம் கோர்ப்போமா
நாம் சொல்வது புரியாவிட்டால்
ஆர்டிசும்
புரிந்ததை பகிராவிட்டல்
ஆர்டிசும்
நீ என்ன ஆர்டிசக் குழந்தையா
நான் சொன்ன காதலும் புரியவில்லை
உனக்கு புரிந்த என் காதலையும் பகிரவில்லை
பளபளக்கும் முத்தொன்று
சிற்பிக்குள் அடைபட்டு
அழும் கண்ணீர் யார் அறிவார்