prahasakkavi anwer - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : prahasakkavi anwer |
இடம் | : இலங்கை ( காத்தான்குடி ) |
பிறந்த தேதி | : 29-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 652 |
புள்ளி | : 117 |
பெயர் - முகம்மது புகாரி அன்வர்
புனை பெயர் - பிரகாசக்கவி
பிறந்த இடம் - காத்தான்குடி .மட்டக்களப்பு
பிறந்த திகதி - 1987. 11. 29
தற்போது வசிக்கும் நாடு - கட்டார் .
கல்வி தகமை - க / போ / த உயர் தரம் .
கல்விகற்ற பாடசாலை - மட் / அல் ஹிரா மகா வித்தியாலயம் காத்தான்குடி ,
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை .
ஆர்வம் - கவிதை எழுதுதல் , சிறுகதை எழுதுதல் .
பரிசுகள் - பல கவிதை போட்டிகளில் முதலாம் , இரண்டாம் , மூன்றாம் பரிசுகள் .
படைப்புகள் வெளிவந்த ஊடகங்கள் - இலங்கை தினகரன் வார மஞ்சரி , வீரகேசரி வார
வெளியீடு , மெட்ரோ நியூஸ் , ஜனனி வார இதழ் , மித்திரன் வார இதழ் , ஈழ நாதம் ,
தினக்கதிர் , நீங்களும் எழுதலாம் காலாண்டு இதழ் , கலை தந்தி காலாண்டு இதழ் ,
ராணி ,
வார உரைகள் , தாய் மண் , நமது பாதை காத்தான் குடி இன்போ இணையதளம் , யுவர்
காத்தான்குடி இணையதளம் , துருவம் இணையதளம் , இலங்கை நெட் இணையதளம் , எழுத்து
இணையதளம் .
முகவரி - இல - 15, பழைய விதானை வீதி , காத்தான்குடி -03, இலங்கை .
நூல்கள் - தடம் தொலைத்த தடயங்கள் கவிதை நூல் ( வெகு விரைவில் வெளியிடப்பட
உள்ளது )
மின்னஞ்சல் - anwerm58@gmail.com
சிலநாட்களாய் மழைத்தேன் அருந்தி
மண்டைச்சளி பிடித்துப்போனது எனக்கு
மூக்கோடிப்பிள்ளையைப்போல சினு சினுப்பதாய்
மழையைப்பார்த்து கடிந்துகொள்கிறாள்
பக்கத்து வீட்டுக்காரி
சட்டென்று முல்லை பூ
பூப் பூத்ததைப்போன்று
வானத்தின் தங்கமுலாம் பூசப்பட்ட ஆகாயத்தோட்டத்தின்
ஒற்றைப் பழமொன்று
இழுத்து மூடப்பட்ட ஜன்னல் இடுக்குகளினூடே
என்வீட்டுக்குள் கனிந்து வீழ்கிறது !
வைக்கோல் புதரொன்றுக்குள்
புதைத்தெடுக்கப்பட்ட மாங்கனிகளைபோல
இதற்க்குமுன்பும் இப்பழங்கள்
என்வீட்டு முற்றத்தில் வந்து
கொத்துக் கொத்தாய் வீழ்ந்திருக்கின்றன
அப்போதெல்லாம் இந்தப்பழங்களை யாரும் ருசிக்கவோ
அல்லது புசிக்கவோவ
இன்றைப்போல்தான் அன்றும்
படுக்கையிலும்
உறக்கத்திலும்
மலம்
சலம் கழித்துக்கிடந்தான்(ள்) அவன்(ள்)
இன்றைப்போல் அன்று
அவனை(ளை) யாரும் திட்டவுமில்லை
மூக்குப்பொத்தி முணங்கவுமில்லை !!!
அன்றும் இன்றும்
அவன்(ள்) உருவம் ஒன்றைத்தவிர
அப்படியேதான் இருக்கிறது உள்ளம்
ஒரு குழந்தை போல இவனு(ளு)க்கும் !
இல்லாத ஒன்றை
இருப்பதாய் சொல்லிக்கொள்கிறது
சால்வைக்காரனின்சாயம்போன நாவு !
கடலை அள்ளியெடுத்து
கரண்டி ஒன்றில் ஒழித்து வைத்ததைப்போல ....
அன்று
இரண்டாம் இனம்பிடித்து கருவறுத்து
கண்ணாடி கிண்ணங்களில்
இரத்தம் ஊற்றி
கதறல் இசைகளுடே
நடனமாடிப் பழக்கப்பட்டவன் அவனென்பதால்
இன்று
மூன்றாம் இனம்பிடித்து மல்லுக்கட்ட
பூதங்களுக்கு புத்தாடை மாட்டி
புறாக்களின் தேசத்தில்
அர்ச்சனை நடாத்த ஒத்திகை பார்க்கிறான்
ஆனாலும் பாவம் அவன்
நாளை ஒரு நாயைப்போல
அல்லது
நாணம்கெட்ட பேயைப்போல
எம் வீட்டு வீதிகளில்
புள்ளடிதேடி ....
குறிப்பு
/// இக்கவிதை இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம
இல்லாத ஒன்றை
இருப்பதாய் சொல்லிக்கொள்கிறது
சால்வைக்காரனின்சாயம்போன நாவு !
கடலை அள்ளியெடுத்து
கரண்டி ஒன்றில் ஒழித்து வைத்ததைப்போல ....
அன்று
இரண்டாம் இனம்பிடித்து கருவறுத்து
கண்ணாடி கிண்ணங்களில்
இரத்தம் ஊற்றி
கதறல் இசைகளுடே
நடனமாடிப் பழக்கப்பட்டவன் அவனென்பதால்
இன்று
மூன்றாம் இனம்பிடித்து மல்லுக்கட்ட
பூதங்களுக்கு புத்தாடை மாட்டி
புறாக்களின் தேசத்தில்
அர்ச்சனை நடாத்த ஒத்திகை பார்க்கிறான்
ஆனாலும் பாவம் அவன்
நாளை ஒரு நாயைப்போல
அல்லது
நாணம்கெட்ட பேயைப்போல
எம் வீட்டு வீதிகளில்
புள்ளடிதேடி ....
குறிப்பு
/// இக்கவிதை இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம
இரைச்சல்களின் சாலைகளில் தினம் நடந்து
இரத்தம் சொட்டிய காதுகளை
ஓர் ஆமைகுஞ்சு போல்
போர்வைக்குள் உள்ளிழுத்து
ஒட்டகங்களை போல் ஓய்வின்றி
நீண்ட நிசப்தங்களின் மேல் பயணிக்க
ஒத்திகை பார்கிறது ஊமை மனசு
உருளுதல் உலாத்துதல் என்று சில
சர சரப்புகளினூடே
விழிகள் கதவடைக்க
பற்றிக்கொள்கிறது பயணம்
ஏகாந்தத்தின் ஸ்பரிசங்களில்
அமைதிக் கிண்ணங்களில்
மெய் கரைந்துருக
இதயம் வெடித்த
இலவம்பஞ்சு போல
காற்றோடு கைகோர்க்கிறது கனவு
மற்றுமொரு பொழுதின்
பிரசவம் ஒன்றிற்காய்....!