மண்ணாங்கட்டி

இல்லாத ஒன்றை
இருப்பதாய் சொல்லிக்கொள்கிறது
சால்வைக்காரனின்சாயம்போன நாவு !
கடலை அள்ளியெடுத்து
கரண்டி ஒன்றில் ஒழித்து வைத்ததைப்போல ....
அன்று
இரண்டாம் இனம்பிடித்து கருவறுத்து
கண்ணாடி கிண்ணங்களில்
இரத்தம் ஊற்றி
கதறல் இசைகளுடே
நடனமாடிப் பழக்கப்பட்டவன் அவனென்பதால்
இன்று
மூன்றாம் இனம்பிடித்து மல்லுக்கட்ட
பூதங்களுக்கு புத்தாடை மாட்டி
புறாக்களின் தேசத்தில்
அர்ச்சனை நடாத்த ஒத்திகை பார்க்கிறான்
ஆனாலும் பாவம் அவன்
நாளை ஒரு நாயைப்போல
அல்லது
நாணம்கெட்ட பேயைப்போல
எம் வீட்டு வீதிகளில்
புள்ளடிதேடி ....
குறிப்பு
/// இக்கவிதை இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்
சமுகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடக்குமுறைகளை குறித்து நிற்கிறது ///