திருக்குறளே தேசிய நூல்

தமிழுக்கு
தவமின்றி கிடைத்த நூல்
தனித்துவம் வாய்ந்த " தலைமை நூல்"

உயிர்களுக்கு
உவமையாக உண்மையை
போதிக்கும் "உயிர் நூல்"

வாழ்வியலில்
அறத்தை தாங்கி நிற்கும்
ஆதிகால "ஆதவ நூல் "

மானிடர்களுக்கு
வாழ்க்கை நெறிகளை வரமளிக்கும்
மண்ணுலக "மகிமை நூல்"

குழந்தைகளுக்கு
அம்மாவின் அறிவுரை தாலாட்டாக
புகட்டப்படும் "அன்னை நூல்"

அகிலத்தின்
அதர்மங்களை அழிக்க வந்த
உன்னதமான "அகிம்சை நூல்"

இல்லறத்தின்
இனிமையை மேன்மையாக கூறிய
இவ்வுலக "மேன்மை நூல்"

உலக
தேசங்கள் போற்றி வளர்க்கும்
திருக்குறள் "இந்திய தேசிய நூல் "

எழுதியவர் : கவி கண்மணி , கட்டுமாவடி (4-Dec-13, 9:39 pm)
பார்வை : 474

மேலே