இருப்பதில் மகிழ்ச்சி கொள்

காணாத
கண்ணுக்கு
ஆசை அதிகம் ....

பேசாத
வார்த்தைக்கு
வலிமை அதிகம் ....

உழைக்காத
கரத்துக்கு
தேவை அதிகம் ....

உதவாத
பணத்துக்கு
செலவு அதிகம் ....

அஞ்சாத
நெஞ்சத்திற்கு
வீரம் அதிகம் ....

துணிவான
செயலுக்கு
மதிப்பு அதிகம் ....

ஆசை என்றும் அதிகமே ....
அதுவும் கூட நல்லதல்ல ....
இருப்பதிலே மகிழ்ச்சி கொள் ....
என்றும் வாழலாம் மகிழ்ச்சியாய் .....

எழுதியவர் : Beni (4-Dec-13, 8:28 pm)
பார்வை : 114

மேலே