thozhi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : thozhi |
இடம் | : நாகர்கோயில் |
பிறந்த தேதி | : 13-Apr-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 443 |
புள்ளி | : 308 |
இப்படிதான் வாழ வேண்டும் என்று நினைப்பவள் .....
தமிழ் என்னும் காட்டில் துள்ளி திரியும் ஒரு புள்ளி மான் ......
நான் தமிழை நேசிப்பவள் அல்ல ...
அதை சுவாசிப்பவள் ....
வணக்கம் தோழர்களே...
2014ஆம் ஆண்டின் முதல் விருதென ,"வளர் மென்பா கவிசெம்மல்-2013 "எனும் விருது இருவர்க்கு அளிக்கப் படுகிறது...
பிரிசில்லா எனும் ஒரு படைப்பாளி தளத்தில் வந்த நாள் முதல் அவரின் படைப்புகள் எனது கண்களின் விரிப்பில் ..நல்ல ஆக்கம் அவரிடம் உள்ளது எனக்கு மகிழ்ச்சி...இவர் நிறைய வாசிக்க வேண்டும் உறுதியாய் கவிதை உலகில் நல்ல முன்னேற்றம் இவர் அடைவார் இவரைப்போல் தோழர் சுதா
யுவராஜ் நல்லதொரு படைப்பாளியாக தளத்தில் வளம் வருவது மகிழ்ச்சியே...
**************************************************************************
தோழர்கள்
@@@@@@@@ பிரிசில்லா @@@@@@@@@
@@@@@@ சுதா யு
குழந்தை இல்லாதவர்கள் குழந்தையை தத்து எடுப்பது சரியா ?
மலையில்
இருந்தே விழும்
நதியின் பிராவகம்
எங்கே தோன்றியது
என்றே எவராலும்
எடுத்தே இயம்பிடமுடியுமா ...!!!
பின் ஏன் மனிதர்களே
சாதி
எங்கே தோன்றியது
என்றே அறியாமலே
சாதி சாதி
என்று சொல்லியே
சங்கம் வைத்தே
தமிழை வளர்க்காமலே
சாதியை வளர்ப்பதேனோ ...???
உங்கள் அத்தையோட பொண்ணோட கணவர் தங்கையோட பையன் உங்களுக்கு என்ன உறவுமுறை ?
ஒரு ரோஜா
செடியில் கண்டேன்,
முள்ளின் வலிமை என்னவென்று....
ஒரு பாயும்
சிறுத்தையில் கண்டேன்,
காலின் வலிமை என்னவென்று....
ஒரு ஓவியனின்
ஓவியத்தில் கண்டேன்,
கரத்தின் வலிமை என்னவென்று....
ஒரு பறக்கும்
கழுகில் கண்டேன்,
பார்வையின் வலிமை என்னவென்று....
ஒரு அழகிய
பூஞ்சோலையில் கண்டேன்,
இயற்கையின் வலிமை என்னவென்று....
ஒரு விளையாட்டு
வீரனில் கண்டேன்,
விடாமுயற்சியின் வலிமை என்னவென்று....
உனது அழகிய
நட்பில் கண்டேன்,
இறைவனின் வலிமை என்னவென்று....
கண்ணுக்கு காவலாய்
இமை இருக்க,
பாதத்துக்கு காவலாய்
செருப்பு இருக்க,
ஏன் இறைவா,
மனதுக்கு காவலாய்
பூட்டு போடவில்லை நீ .....
சிந்தனையை வெளிபடுத்த
வார்த்தை தந்தாய்,
அன்பை வெளிபடுத்த
இதயம் தந்தாய்,
ஏன் இறைவா,
அன்பிற்கு ஒரு
எல்லை தரவில்லை ....
எடுத்து சொல்ல நாவு உண்டு,
சொல்ல வேற வார்த்தை இல்லை,
வார்த்தையின் அர்த்தம் தேட,
என்னிடத்தில் ஓர் அகராதி இல்லை......
சொல்ல என்றும் தேவை இல்லை,
வயது என்னும் வாழ்வின் எல்லை,
நாவு கூட வாழ்த்து சொல்லும்,
நீ சொன்ன நல்ல வார்த்தைக்காக ......
பேசும் முன்னால், யோசி நன்றாய்,
யோசனை என்றும் வெற்றி தருமே,
வெற்றி என்னும் பரிசை பெற்று,
வெல்ல வேண்டும் அனைவர் மனதை.....
பேசிய பின் யோசிக்காதே,
யோசிப்பது பயன் இல்லையே,
பேசியது தவறானால்,
அதுவும் கூட நோவின் வலியே......
வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு,
வெல்ல வேண்டும் மனங்களையே,
என்றும் யோசி பேசும் முன்னால்,
வாழ்க்கை என்றும் செழித்து ஓங்கும்...
உன் பேச்சில்
கண்டேன்,
கட்டபொம்மனை....
உன் வீரத்தில்
கண்டேன்,
சத்ரபதி சிவாஜியை....
உன் அறிவில்
கண்டேன்,
அப்துல் கலாமை....
உன் எழுத்தில்
கண்டேன்,
கண்ணதாசனை....
உன் எண்ணத்தில்
கண்டேன்,
திருவள்ளுவரை....
உன் கொடையில்
கண்டேன்,
பாரி வள்ளலை....
இத்தனை பேரையும் கண்டும்,
இன்னும் காணவில்லையே,
இறைவனை உனக்குள் ....
தேடி பார்,
மாறும்
உன் சிந்தனை முழுதும்....
மனிதனாய் வாழ ஆசைப்படு,
இறைவன் உனக்குள் வெளிப்படுவார்,
மகிழ்ச்சி என்றும் பொங்கிடுமே .....