தேடுகிறேன் உனக்குள்

உன் பேச்சில்
கண்டேன்,
கட்டபொம்மனை....

உன் வீரத்தில்
கண்டேன்,
சத்ரபதி சிவாஜியை....

உன் அறிவில்
கண்டேன்,
அப்துல் கலாமை....

உன் எழுத்தில்
கண்டேன்,
கண்ணதாசனை....

உன் எண்ணத்தில்
கண்டேன்,
திருவள்ளுவரை....

உன் கொடையில்
கண்டேன்,
பாரி வள்ளலை....

இத்தனை பேரையும் கண்டும்,
இன்னும் காணவில்லையே,
இறைவனை உனக்குள் ....

தேடி பார்,
மாறும்
உன் சிந்தனை முழுதும்....

மனிதனாய் வாழ ஆசைப்படு,
இறைவன் உனக்குள் வெளிப்படுவார்,
மகிழ்ச்சி என்றும் பொங்கிடுமே .....

எழுதியவர் : Beni (15-Dec-13, 1:43 pm)
Tanglish : thedukiren unakkul
பார்வை : 159

மேலே