இறைவனின் வலிமை நம் நட்பில்

ஒரு ரோஜா
செடியில் கண்டேன்,
முள்ளின் வலிமை என்னவென்று....

ஒரு பாயும்
சிறுத்தையில் கண்டேன்,
காலின் வலிமை என்னவென்று....

ஒரு ஓவியனின்
ஓவியத்தில் கண்டேன்,
கரத்தின் வலிமை என்னவென்று....

ஒரு பறக்கும்
கழுகில் கண்டேன்,
பார்வையின் வலிமை என்னவென்று....

ஒரு அழகிய
பூஞ்சோலையில் கண்டேன்,
இயற்கையின் வலிமை என்னவென்று....

ஒரு விளையாட்டு
வீரனில் கண்டேன்,
விடாமுயற்சியின் வலிமை என்னவென்று....

உனது அழகிய
நட்பில் கண்டேன்,
இறைவனின் வலிமை என்னவென்று....

எழுதியவர் : Beni (19-Dec-13, 7:42 pm)
பார்வை : 208

மேலே