குமரிப்பையன் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  குமரிப்பையன்
இடம்:  குமரி மாவட்டம்
பிறந்த தேதி :  23-Apr-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jul-2013
பார்த்தவர்கள்:  8759
புள்ளி:  4043

என்னைப் பற்றி...

இந்த தமிழ் கடலில் கலந்த ஒரு துளி மழை நீர் நான்..
என் படைப்பை விட உங்கள் படைப்பை ரசிக்கிறேன்.!
தற்போது :: KINGDOM OF BAHRAIN
தொடர்புக்கு:: +97333214978

நட்புடன் குமரி

என் படைப்புகள்
குமரிப்பையன் செய்திகள்
குமரிப்பையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2022 1:55 pm

Father's Day

அப்பா தினம்
அப்பாக்கள் தினம்
அப்பாக்கள் தினம் தினம்

அந்தோ.. முதியோர் இல்லத்தில்...!

மேலும்

அச்சோ...!! உண்மைதான்.!!👌 05-Nov-2022 3:53 am
குமரிப்பையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2022 5:03 pm

எந்த நிறம் பிடிக்கும்..?
சட்டை வாங்க வீதி போறேன்
எந்த நிறம் விருப்பம் கேட்டாள்..?
மஞ்சள் என்றேன்..
திருப்பி கேட்டாள்
நீ கலைஞர் ஆளா...?
பச்சை என்றேன்..
ஓ.. விவசாயி..?
ஆரஞ்சு என்றேன்..
மோடியா..?
கருப்பு என்றேன்..
பெரியார்.....?
நீலம் என்றேன்..
அம்பேத்கர் ..?
சிவப்பு என்றேன்..
காரல் மார்க்ஸ்..?
ஆளை விடு
ஆடையே வேண்டாம்..!
அப்படி சொல்லாதே
ஆசையாய் வாங்கி தாரேன்
வெள்ளைதான் பொருத்தம் என்றாள்..!
அமைதியாய் நான் சொன்னேன்
நீயே முடிவு செய்தாய்..
அடியேன் ஒரு காந்தியன்..!

மேலும்

அருமை வண்ண விளக்கங்கள் 09-Jun-2022 2:40 pm
குமரிப்பையன் - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2022 12:04 pm

#விலைக்குறைப்பு..
கண்துடைப்பு.!

போராட்டம் விலைகுறைக்க
நடத்தினாலும்
பொல்லாத அரசாங்கக்.. .
குள்ளநரி
நாருரிக்கக் கல்தானே
நாமறிவோம்
நாணயந்தான் காணவில்லை
நரியிடத்தில்..!

பத்து ரூபாய் விலையேற்றி
பதைக்கச்செய்து
பாவிகள் குறைத் திடுவார்
ஒன்றிரண்டு
கத்தித்தான் ஓய்ந்து விட்டோம்
காலங்காலம்
கயவர்கள் மாறவில்லை
கள்ளம்மேலும்..!

மக்களின் உழைப்பினைச்
சுரண்டிநித்தம்
மாபணந்தான் சேர்த்துவிட்டார்
கார்ப்பரேட்டும்
சிக்கலில் உழலும் மக்கள்
விடுபட்டுத்தான்
சிறப்புடனே வாழும்நாள்
வந்திடனும்..!

பாதிவிலை மீதிவரி
பகற் கொள்ளையாய்
பாவிகளின் ஆட்சிதரு
அதிகாரத்தில்
மோதித்தான் பார்த்திடலாம்

மேலும்

வணக்கம் சார். நலமாக இருக்கிறேன். தாங்கள் நலமா..? நானும் வெகு நாட்களுக்குப் பின் இங்கு பதிவிடுகிறேன். விசாரிப்பிற்கு மிக்க நன்றி இப்படி நிறைய எழுதி இருக்கிறேன். இங்கு பதிவிட வேண்டும் 23-May-2022 3:16 pm
கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.. 23-May-2022 3:14 pm
வணக்கம் சாந்தி அவர்களே... வரி கொடுமையை அடுக்கி விட்டீர்கள்.. உண்ண வரி... உடுக்க வரி.. சற்று அயர்ந்தால்... உறக்கத்திற்கும் வரி போடுவார்கள்... கலிகாலம் என்பது இதுதானோ.... மேலும் எழுதுவதற்கு அச்சமாக இருக்கு... எழுத்து வரிகளுக்கு அபராதம் போட்டு விடுவார்களோயென்று...?? வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 23-May-2022 1:45 pm
வணக்கம்.. நலமா..? நீண்ட இடைவெளிக்கு பின் தளத்தில் வந்தேன்.. உங்கள் பதிவு கண்ணில் பட்டது..! உங்கள் நடை இன்னும் மாறவே இல்லை..! 23-May-2022 1:28 pm
குமரிப்பையன் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2021 9:06 pm

காலம் கடந்து செல்கிறது
எதையும் பொருட்படுத்தாமல் !
இயற்கை கற்பிக்கிறது நமக்கு
இதன் மூலம் ஒரு பாடம் !
மனிதா எதற்கும் அஞ்சாதே
தடைகளைக் கண்டு துவளாதே !
நடைபோடு நிற்காமல் என்றும்
போராடு நெஞ்சில் துணிவுடன் !
உறுதி வேண்டும் உள்ளத்தில்
மாற்றம் வந்திடும் வாழ்வில் !
நம்பிக்கைத் தேவை அவசியம்
வெற்றி ஒருநாள் நிச்சயம் !


பழனி குமார்
19.11.2021

மேலும்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே . 20-Nov-2021 10:21 pm
மைய கருத்து புரிகிறது..! வெற்றிமீது வெற்றி வந்து நம்மை சேரும்.. அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் ஒற்றுமையை சேரும்..! 20-Nov-2021 12:50 pm
குமரிப்பையன் - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2021 12:11 pm

அறுசீர் கழி நெடிலடி விருத்தம்


தாமாத் தான்தா னபேத
*******சாம தண்ட செய்தயிஸ்

லாமா மாம்மாற் றியது
*******நம்மிந் தைமுஸ் லீம்களாய்

ஆமாம் ஆங்கி லருந்தான்
******மாற்றி னாரிந் துக்களை

சாமா. னியயிந். துவைமன்
*******றத்தில் யேற்றல். ஞாயமோ

.......

மேலும்

அருமையாகா சொன்னீர்கள். தீண்டாமையின் தாக்கத்தை..! நன்று .! 05-Oct-2021 3:54 pm
குமரிப்பையன் - கவிதைக்காரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2021 1:09 pm

அநேகமாக
சாத்தியமில்லை
எனினும்,
காதலை விட
நட்பே முக்கியம்
என்றே
முடிந்து போகும்
விவாதங்கள்.

கருத்து ஒத்தவன்,
எந்நிலையிலும்
உதவிடும்,
இடுக்கன் களையும்
நட்பு.

உண்மைதான்,
எந்த நிலையிலும்
எதையும்
மறைக்க தேவையில்லாதது,
நட்பு.

ஆனால்,

யார் சொன்னது,
காதலில்
இதெல்லாம்
இல்லையென..

யாரோ ஒருத்தர்
இருக்கிறார்கள்
நமக்காக....
என்ற
நிம்மதிதானே
காதல்...

அக புற தனிமையை
கொல்லும்
அமைதியான கொலைதானே
காதல்...

இரண்டிலும்
வயது தேவையில்லை
என்றாலும்,
காதலே
சிறந்தது...

எல்லோரும்
நினைப்பது போல்,
காமமே காதலெனில்,
நட்பு தான்
சிறந்தது....

ஏனெனில்,

ஆழ்ந்த உறவே

மேலும்

காதலும் நட்பும் இரு கண்களோ...? 05-Oct-2021 3:50 pm
குமரிப்பையன் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2021 8:16 am

ஒருவன் என்னை கடந்து செல்கிறான். அவனைப் பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அழைத்தேன். 

என்னப்பா உன்னை பார்த்தால் இந்த பகுதியில் புதியவராக தெரிகிறது. உனது விவரங்களை பற்றி கூற முடியுமா என்றேன். அவனும் புன்சிரிப்புடன அருகில் வந்து ,ஐயா என்னைப் பற்றி என்ன விவரங்கள் தேவை என்று எதிர் கேள்வி கேட்டான். உனது தனிப்பட்ட விவரங்கள் தான் தேவை என்றேன். ஐயா, உங்கள் மனம் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் நான் கூறுகிறேன் , கேளுங்கள் என்றான். 

எனது பெற்றோர் பற்றி விவரங்கள் தெரியாது. ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தேன். எனக்கு பெயர் நானே வைத்துக் கொண்டேன் எனது நண்பர் கூறியபடி. அங்குள்ள அனைவரும் அதற்கும் ஒப்புதல் தந்தனர். நான் சாதி மதம் அறியேன். தமிழ் மட்டும் பேசுவது எழுதுவது இளமைக் காலம் முதல் . எனக்கு தாய் மொழி நிச்சயம் அது என்று புரிகிறது. எனக்கு சொந்த பந்தம் என்று யாரும் இல்லை. 

எனக்கு கல்வி சம்பந்தமாக அனைத்து உதவிகளை 

திரு கிருஷ்ணன் என்பவரும், 

உடை மற்றும் விடுதியின் மாதாந்திர செலவுகள் 

திரு கிறிஸ்டோபர் என்பவர் கவனித்துக் கொள்கிறார் . 

மேலும் இதர செலவுக்கு 
திரு இப்ராகிம் என்பவர் அவ்வப்போது பல உதவிகளை செய்து தருகிறார்.

நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அதில் விருப்பம் இல்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் எனக்கு நல்ல வேலையை இந்த விடுதியின் காப்பாளர் ,
திரு கரண் சிங் அவர்கள் வாங்கிக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார் . 

உடனே முதல் நபர் மிக்க மகிழ்ச்சி என்றும் பாராட்டி வாழ்த்துகள் கூறினார். இறுதியாக அவனை அணைத்து கொண்டு, இன்னும் உனது பெயரைக் கூறவே இல்லையே என்று கேட்டவுடன், அவன் உடனடியாக எழுந்து நின்று 
எனது பெயர், 

பாரத் குமார் ( @ ) இந்தியன் என்று பெருமையுடன் கூறினான். நான் தமிழன் என்று கூறிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன் என்றான் .

இது நம் தாய் திருநாடு. உள்ளம் சிலிர்க்க அவனை கட்டி அணைத்தேன். 

இதில் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே ரேசன், ஓரே கட்சி, ஒரே ஆட்சி என்று கூறத் எவருக்கும் தோன்றாது. மக்கள் ஏற்கவும் மாட்டார்கள் என்பது என் கருத்து.

அனைவரும் அனைத்தையும் மறந்து "இந்தியன்" என்ற எண்ணத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி இறுதி வரை ஒன்றிணைந்து, ஒன்றிய அரசை வலுவான வல்லரசாக மாற்றி என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம். 


 ( இதன் கருவும் நோக்கமும். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். )


பழனி குமார் 
   17.09.2021  

மேலும்

குமரிப்பையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2021 4:20 pm

காந்திமஹானே சற்று நிற்க..

சிறைக்குள்ளே அனுப்பினான் ஆங்கிலேயன்
மண்ணறைக்குள்ளேயே அனுப்பினான் இந்தியன்
பணம் எல்லாம் உன் படம்தான்
நீ நினைக்கலாம் பெருமை என்று
ஒருபோதும் இல்லை...
உன்னை பதுக்கி வைத்தால்
நீ காட்டி கொடுக்கமாட்டாய்
அதனால்தான் உன் படத்தை போடுகிறோம்..!
ஏழையின் ஆடையை கண்டு
கதர் ஆடை நீ அணிந்தாய் அன்று
எஜமானர்கள் ஆடையானது இன்று..!
உனக்கு தெரியுமா....
காந்தி ராஜ்யம் என்று சொல்லி
பிராந்தி ராஜ்ஜியம் ஆக்கிவிட்டார்கள்..!
நீ கட்சியை கலைக்க சொன்னவன்...
நாங்கள் உன்பெயரிலேயே
கட்சிகள் தொடங்கினோம்..!
நீ உண்ணாவிரதம் இருந்தால்
ஆட்சியாளர் பதறினார்கள்..
நாங்கள் உண்ணாவிரதம் இருந்தால்
பொதுமக்கள் பத

மேலும்

வாழ்க காந்தி தேசம்!! 05-Oct-2021 7:13 pm
குமரிப்பையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2020 4:00 pm

என்றோ ஒரு நாள்...
எழுத்திலே விழுந்தேன்
எழுத்திலே கலர்ந்தேன்
எழுத்தாலே எழுந்தேன்...

என்றோ ஓர் நாள்..
எழுத்தை துறந்தேன்
என்னையே மறந்தேன்
எங்கெங்கோ போனேன்..

என்றாலும்..
என்னுள்ளே எழுத்து
எங்கோ துயிலில்
என் பார்வையை விட்டு..

இன்று..
துயில் துறந்து..
தூரிகை பிடித்து
பதிவுகள் பல
படிப்படியாய் வர
வரம்வேண்டும்.. உங்கள்
கரம் வேண்டும்
எழுத்து நட்புக்களே..
எழுத்து நல் பூக்களே...!

நட்புடன்
குமரி பையன்..

மேலும்

விழைகிறோம் நண்பரே...!! விளையுமோ அறியவில்லை....!! 02-Oct-2020 10:59 am
கவிதை எழுதுபவர்களால் சும்மா இருக்க இயலாது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகிறேன். 28-Sep-2020 6:22 pm
குமரிப்பையன் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
31-Mar-2018 10:10 pm

வருடங்கள்
நாற்பது
ஓடியபின்னும்
வற்றாத
நினைவோடு
வடிக்கிறது
விழிகள்நீரை...
மண்ணறையில்
மறைந்தாலும்
மனஅறையில்
நிறைந்திருக்கும்
அப்பாக்கு
கண்ணீரின்
அஞ்சலிகள்..!

மேலும்

மறைந்து எத்தன ஆண்டுகள் ஆனாலும் அப்பாவை மறக்க முடியாது..என் தந்தை 1993ல் இயற்கை எய்தினார். அவர் வாழந்து கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். அவர் பேசிய சில நகைச்சுவை நிறைந்த சொற்கள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன. 28-Sep-2020 6:34 pm
நான் சிறுவனாக இருந்த போது அந்த துயரம் நடந்தது.. ஒன்றும் புரியாத பருவம்.. ஆனால் அதன் தாக்கம் பின்னாளில் எங்கள் குடும்பத்தையே புரட்டிபோட்டது.! உங்கள் கருத்தின் ஆழத்தை அனுபவித்து உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்.! உணர்வை பகிர்ந்தமைக்கு நன்றிகள் இளங்கவியே.! 02-Apr-2018 2:24 pm
மிக்க நன்றிகள் அறிஞரே.! நட்புடன் குமரி 02-Apr-2018 2:18 pm
ஒரு தந்தையின் அன்புக்கு மண்ணில் எதுவும் ஈடாகாது தாயின் கருவறை போல வாழ்நாள் முழுவதும் குடும்பத்தை சுமக்கும் அவன் மனம் எப்போதும் கோயில் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 11:57 am
குமரிப்பையன் - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2018 9:00 pm

🍀☘🌾🍀☘🌾

#அம்மா ❣💜💛💚💙

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செ

மேலும்

நன்றிகள் தோழமையே..! கதைகள் மூலம் நாம் மனிதத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.. பெற்றோர்கள் இன்று வீதியில் அவர்களை கேட்டால் விதியில் என்கிறார்கள்.! விதியை மதியால் மாற்றமுடியாதா.? தொடர்ந்து பதிவை படித்து கருத்தை பதிக்கும் உங்கள் ஊக்குவிப்புக்கு மீண்டும் நன்றிகள்.! 31-Mar-2018 10:17 pm
திரு.குமாரி அவர்களே.... தாங்கள் பகிர்ந்த படைப்புகள் எல்லாமே வெகுவாக சிகலாயிக்கும் வகையில்தான் இருக்கும். அந்தவகையில் இது இன்னும் ஒரு பதிவு. நல்ல பதிவு, நல்ல கருத்து, பகிர்ந்தமைக்காய் மிகவும் நன்றி. 22-Mar-2018 6:40 pm
கவின் சாரலன் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Mar-2018 11:35 am

நண்பன் 1 : மங்கையராய் மண்ணில் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் அம்மா !

நண்பன் 2 : மண்ணில் மங்கையர் நம்மைக் காதலிப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டுமப்பா !

மேலும்

உண்மை நூற்றுக்கு நூறு உண்மை . தகவல் தொடர்பு விரல் நுனியில் சாத்தியமான இக்காலத்தில் போலிகளிடம் எச்ச்சரிக்கை தேவை . 31-Mar-2018 2:56 pm
காதல் வலையில் விழுந்தால் தப்பமுடியாது கவிஞரே. வலை விரிப்போரில் பலபேர் போலிகள் தேவை எச்சரிக்கை. 31-Mar-2018 10:12 am
நவீன தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தால் வளர்ச்சி பெற்றிருக்கும் சமூக வலைத் தளங்களால் contact is easy . அசலுக்கும் போலிக்கும் உண்மைக்கும் பொய்க்கும் ஏமாற்றுக் காரர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் சரியான தகவல் தெரியாமல் ஆழம் தெரியாமல் காலைவிடும் ஆணோ பெண்ணோ பின்னால் வருந்த நேரிடும் . புரிதலுக்கு மிக்க நன்றி கவிப்பிரிய பர்வீன். 11-Mar-2018 7:45 pm
அர்த்தமற்ற பொய்யான இனிய வெறுமைகளை நம்பி காதல் வயப்படுபவன் காதல் ஏமாளியாக நிற்பான் . புனை கதைகளில் நாவல் நாடகம் சினிமாக்களில் வரும் காதலை ரசிக்கலாம் மகிழலாம் கண்ணீர் வடிக்கலாம் . அவை யதார்த்தத்திற்கு ஒவ்வா! 11-Mar-2018 7:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (198)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (198)

user photo

moorthy.m

திருக்கோயிலூர்
மட்டுநகர் கமல்தாஸ்

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டக்களப்பு

இவரை பின்தொடர்பவர்கள் (200)

மணிகண்டன்

மணிகண்டன்

தூத்துக்குடி
Arun T

Arun T

Nagercoil
Bharathi

Bharathi

Bangalore

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே