வெற்றி ஒரு நாள் நிச்சயம்

காலம் கடந்து செல்கிறது
எதையும் பொருட்படுத்தாமல் !
இயற்கை கற்பிக்கிறது நமக்கு
இதன் மூலம் ஒரு பாடம் !
மனிதா எதற்கும் அஞ்சாதே
தடைகளைக் கண்டு துவளாதே !
நடைபோடு நிற்காமல் என்றும்
போராடு நெஞ்சில் துணிவுடன் !
உறுதி வேண்டும் உள்ளத்தில்
மாற்றம் வந்திடும் வாழ்வில் !
நம்பிக்கைத் தேவை அவசியம்
வெற்றி ஒருநாள் நிச்சயம் !


பழனி குமார்
19.11.2021

எழுதியவர் : பழனி குமார் (19-Nov-21, 9:06 pm)
பார்வை : 703

மேலே