விலைக்குறைப்பு கண்துடைப்பு

#விலைக்குறைப்பு..
கண்துடைப்பு.!

போராட்டம் விலைகுறைக்க
நடத்தினாலும்
பொல்லாத அரசாங்கக்.. .
குள்ளநரி
நாருரிக்கக் கல்தானே
நாமறிவோம்
நாணயந்தான் காணவில்லை
நரியிடத்தில்..!

பத்து ரூபாய் விலையேற்றி
பதைக்கச்செய்து
பாவிகள் குறைத் திடுவார்
ஒன்றிரண்டு
கத்தித்தான் ஓய்ந்து விட்டோம்
காலங்காலம்
கயவர்கள் மாறவில்லை
கள்ளம்மேலும்..!

மக்களின் உழைப்பினைச்
சுரண்டிநித்தம்
மாபணந்தான் சேர்த்துவிட்டார்
கார்ப்பரேட்டும்
சிக்கலில் உழலும் மக்கள்
விடுபட்டுத்தான்
சிறப்புடனே வாழும்நாள்
வந்திடனும்..!

பாதிவிலை மீதிவரி
பகற் கொள்ளையாய்
பாவிகளின் ஆட்சிதரு
அதிகாரத்தில்
மோதித்தான் பார்த்திடலாம்
முனைப்போடுதான்
மூர்க்கரின் முன்பாக
உயிர்வாழத்தான்..!

உண்ணவரி உடுக்கவரி
போட்டார்ஐயோ
உபாதைக் கழிக்கப் போடுவார்கள்
ஓர்வரியோ..?
உயிர்வாழ வரிபோடும்
காலம்முன்னே
உணர்ந்தெழுவோம் தடைபோட
ஒன்றுமையாய் ..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (23-May-22, 12:04 pm)
பார்வை : 27

மேலே