Arun T - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Arun T |
இடம் | : Nagercoil |
பிறந்த தேதி | : 10-May-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 133 |
புள்ளி | : 20 |
புட்டு புட்டு வைக்கிறீயே
பொட்டக் காட்டு எம்மக்கா
குட்டுப்பட்டு நிற்கிறியே
வெட்டவெளியில் என்னக்கா
நீவாங்கிவந்ததென்ன இப்ப
வாரிப்போவதென்ன...(2 முறை )
சீமையில ஆமா சீமையிலதான்
செங்குரங்க கூண்டில் வைச்சு
காட்டிக்காட்டி காசுபார்த்த எம்மாமனவன்
பொட்டகாட்டில் வந்து பொண்ணுபார்த்து
சம்மதமுன்னு சொல்லிபுட
காலும்கையும் தரையிலத்தான் நிக்காமலே
வானத்துக்கும் பூமிக்குமா
எகிறி எகிறி குதிச்சானே என்னப்பன்
நீ வாங்கி வந்ததென்ன இப்ப
வாரிப்போவதென்ன...(2 முறை )
ஐஞ்சுகாணி நிலத்தவித்து
தங்கத்தாலே தாலி செயினு செஞ்சு
சீர்செரத்தையும் சிறப்பாச் செஞ்சு
வண்டியேத்தி அனுப்பிவைச்சான்
சீமைநோக்கி...
நீ வாங
உன்னை நினைக்கையில் என்னை அறியாமல் வரும் புன்சிரிப்பு கொஞ்ச நேர பைத்தியமாக்கி விடுகிறது என்னை ..
மழை வானில்
தோன்றும்
வானவில்லாய்..!
என் கனவில்
என்றும்
அவள் நினைவுகள்..!
ரசனைக்குள் மூள்கி
உணர்வதற்குள் மறைந்து
போகிறாள் கனவைவிட்டு..!!
அழகென்று ரசிப்பேன்
பிரிவன்று தவிப்பேன்...!
வெறுத்து அவ பார்த்தாலும்
விலகிடாது என் மனசு..!!
விரும்பியே தேடும்
தினம் அவள்மனதை ...!
வஞ்சி அவ பார்க்கையிலே அது
நெஞ்சு காணும் சொர்க்கமென
கொஞ்சி சொல்லும் உள்ளுணர்வு
ஊஞ்சல் கட்டி ஆடுது..
எந்தன் உசிரில் இன்று..!!
..கவிபாரதி..
கவிதையில் நான் கண்ட பொய்யும்
கர்வத்தில் நான் தேடிய மென்மையும்
கற்பனயில் நான் பேசாத இன்பமும்
கனவிலே நான் கூறாத ரகசியமும்
கண்ணிலே நான் கொண்ட காதலும்
காத்திருந்து நான் அனுப்பும் இந்த தந்தியும்
கொஞ்சமாக உன் பார்வை பட்டால்
கொஞ்சலாக உன்னை பார்த்து சொல்லும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்…….
நினைவுகள் என் நித்திரையை கொன்று
நிஜத்தை தொலைக்கிறது
கனவுகள் அதன் கல்லறையை தேடி
காற்றில் கலைகிறது
மௌனங்கள் மட்டும் சிறைபட்டு
என் மனதில் நிற்கிறது
மயானங்கள் என் வருகை பார்த்து
மலர் மாலை தருகிறது
மறுக்காமல் நானும் வருகிறேன்
என் காதல் நினைவுகளோடு…..
தேவதை அவளிடம் வரம் கேட்கலாம்,
அவளையே கேட்டால் .
இன்று வரை கொஞ்சம் கர்வம் உண்டெனுக்கு,
உனக்காய் எழுதிய கவிதைகள் என்னுடையதே ..
என் வாழ்கை புத்தகத்தில் உன் பெயர் முன்னுரை துவங்கி முடிவுரை வரை வேண்டுமடி
வேண்டாம் இறைவா இன்னொரு ஜென்மத்தில் இப்படி ஒரு வாழ்கை,
உணர்சிகள் அற்ற ஒரு உரியினத்தில் ஏதேனும் ஒன்றாக என்னை படைத்தது விடு ..
அள்ளி பருக ஆசை இருந்தும் தீண்டாமல் உணர்வுகளை தடுத்து நிறுத்துகிறது உண்மை காதல் ..
உனக்கும் எனக்குமான உறவின் இடைவெளி,
ஓர் இரவு உறக்கத்தின் இடையில் வரும் கனவு போன்றதே ..
ஒரு இரவில் அவளுடன் தனித்திருந்து நொடிகள் கடக்கும் நேரம் அறியவேண்டும் ..
என் கனவுகளை
நினைவுகள் என் நித்திரையை கொன்று
நிஜத்தை தொலைக்கிறது
கனவுகள் அதன் கல்லறையை தேடி
காற்றில் கலைகிறது
மௌனங்கள் மட்டும் சிறைபட்டு
என் மனதில் நிற்கிறது
மயானங்கள் என் வருகை பார்த்து
மலர் மாலை தருகிறது
மறுக்காமல் நானும் வருகிறேன்
என் காதல் நினைவுகளோடு…..