கிராமிய தெம்மாங்கு

புட்டு புட்டு வைக்கிறீயே
பொட்டக் காட்டு எம்மக்கா
குட்டுப்பட்டு நிற்கிறியே
வெட்டவெளியில் என்னக்கா
நீவாங்கிவந்ததென்ன இப்ப
வாரிப்போவதென்ன...(2 முறை )

சீமையில ஆமா சீமையிலதான்
செங்குரங்க கூண்டில் வைச்சு
காட்டிக்காட்டி காசுபார்த்த எம்மாமனவன்
பொட்டகாட்டில் வந்து பொண்ணுபார்த்து
சம்மதமுன்னு சொல்லிபுட
காலும்கையும் தரையிலத்தான் நிக்காமலே
வானத்துக்கும் பூமிக்குமா
எகிறி எகிறி குதிச்சானே என்னப்பன்
நீ வாங்கி வந்ததென்ன இப்ப
வாரிப்போவதென்ன...(2 முறை )

ஐஞ்சுகாணி நிலத்தவித்து
தங்கத்தாலே தாலி செயினு செஞ்சு
சீர்செரத்தையும் சிறப்பாச் செஞ்சு
வண்டியேத்தி அனுப்பிவைச்சான்
சீமைநோக்கி...
நீ வாங்கிவந்ததென்ன இப்ப
வாரிப் போவதென்ன...(2 முறை )

ஆசை அறுபதாம் மோகம் முப்பதாம்
மொத்தம் தொன்னூறாம்
மூனுமாசம் முடிஞ்சு
கடைசி இரவும் கூட விடியல
இருட்டில் வந்து நிக்கா
என்னவளத்த. அக்கா...அக்கா...
நீ வாங்கிவந்ததென்ன இப்ப
வாரிப் போவதென்ன...(2 முறை )

சீமையெல்லாம் தேடித்தேடி
ஒருவழியா கண்டேன் வீட்டை
உள்ளே போய் பார்த்தபின்னே
குலைநடுங்கி நின்னே நானே
செங்குரங்கு கூண்டிருக்கு
ரெண்டுபேரக்காணலியே
நீவாங்கிவந்ததென்ன இப்ப
வாரிப்போவதென்ன...(2 முறை )

செழிப்பான வானமிப்போ
பாலைவனமாயிடுச்சு
வனப்பான மேனியிப்போ
மூழியாததான் நிக்கிறாளே
யாருனு பார்க்காம சீர்செஞ்ச என்னப்பன்
சிறகுந்தான் ஓடிஞ்சி நிக்கா

ஒன்னுனா நூறாப்பேசும்
ஊருந்தான் சுத்திநின்னா
என் சந்ததியே செத்துப்போகும்
என் சங்கடத்தை எங்கச் சொல்ல ...
நீவாங்கிவந்ததென்ன இப்ப
வாரிப்போவதென்ன...(2 முறை )

எழுதியவர் : கனகரத்தினம் (16-Apr-14, 1:02 am)
பார்வை : 148

மேலே