இரும்புக்காடு
அது
ஓர் இரும்புக்காடு..!!
ஒவ்வொரு
இரும்புப் பட்டையும்
ஒரு விதம் ஒரு திடம்
ஒரு கனம் ஒரு நிறம்
ஓர் அளவு ஓர் அதிர்வு
ஓர் உயரம் ஓர் உருவம்
கொண்டதாய் இருக்கும்..!!
பிடிகள்
இருக்காது..
கூர்மை
எத்தனை வீரியம் என்று
தீண்டிடும் வரை தெரியாது..!!
எனக்கான
ஒன்று அல்லது
ஒன்றுக்கு
மேற்பட்ட ஆயுதமோ..
நான்தான் தேர்வு செய்து
வார்துக்கொள்ள வேண்டும்..!!
குழப்பம் என்னை
வதைத்தெடுக்கும்..!!
சிலர்
பிடி கொடுப்பார்
சிலர் தீட்டிக்கொள்ள
சிறு கல் கொடுப்பார்
சிலர் எனக்கு
எந்த பட்டை உகந்தது என்று
எடுத்துரைத்து சென்றிடுவார்..!!
எனக்கும்
சிலவற்றை
பார்த்த கணமே பிடித்துவிடும்..!!
சில
பட்டைகளை
வெட்டி எடுக்க
முடியாமல் தவித்திடுவேன்..
சில பட்டைகளை
காலமென்னும் பாதையினில்
தொலைத்துவிட்டு தேடிடுவேன்..
ஒருசிலவற்றை
அலட்சியத்தால்
கண்டுகொள்ளாமல்
கடந்திடுவேன் நானும்..!!
பிடித்ததை
எடுக்க நினைத்தால்
சில கைகள் என்னை தடுத்துவிடும்..!!
வேண்டாத
ஒன்றாக இருக்கலாம்
வெறும் பொறாமையாக கூட இருக்கலாம்..!!
அந்த
சூழ்நிலையில்
எனக்குத் தேவையான ஆயுதம்
வேறொன்றாகக் கூட இருக்கலாம்..!!
எதனாலோ
எனக்கு அது
எட்டாமல் போய்விடும்
அந்த எதிர்காலத்திலும்..!!
இருந்தும்
எனக்காக
சில ஆயுதங்கள்
தேவை என்று எண்ணி
அந்த சூழ்நிலையில்
எது கிடைக்கின்றதோ
அதனை எடுத்துக்கொண்டு
முடிந்த அளவு வார்த்துக்கொண்டு
தெரிந்த அளவு தீட்டிக்கொண்டு
வாழ்க்கையில்
ஏதோ ஒரு இலக்கினை
வெற்றிகொள்ள புறப்படுகின்றேன்..!!
அந்த
இரும்புக்காடினில்
எனக்கு பிடித்தவை
எனக்கானவை
நான்
எடுக்க முயற்சி செய்து
என்னால் எடுக்க முடியாதவை
அலட்சியத்தில்
கண்டுகொள்ளாதவை
பிறரால் தட்டிவிடப் பட்டவை
சூழ்நிலையால் இழந்தவை
எல்லாம்..
துரு பிடித்த நிலையினில்
கறுத்து மண்டிக் கிடக்கின்றன..!!
அது ஒரு
திறமை என்னும்
பெரும் இரும்புக்காடு..!!