பெரும் புள்ளி

சொருகிய தங்கம் சொக்க தங்கமாய் ஜொலிக்க
சிம்மாசன சிங்கம் சில்லரையை கை வைக்க
பதுக்கிய பட்டாடை சிரிப்பாய் சிரிக்குது
ஏமாந்த கூட்டம் ஏறெடுத்து பார்க்கையிலே......

பெருந்தன்மை பெரும்புள்ளி பகல் வேசம்
பேராதறவு பெருக்கெடுத்து ஓடுது !
பிழைக்கத் தெரியா பொதுமக்கள்
பித்தளையை பெரிதாய் புகழ்ந்திட....

பதவியர் பலதும் பேசா முடித்தார்
கழனி கடப்பாரை பழனி கையேந்த
கொல்லையிலே மாக்கொள்ளை
ஏக்கத்துடன் ஏமாந்து பார்த்து
இன்று வருமோ !
நாளை வருமோ !
விமோட்சனம் மனுதாக்கல்
மன்றாடும் மக்கள் மறுபிறவி
கொடியேற்றம் பதிவாகி எதிர்பாரா
மறுபதிப்பு பஞ்ஜாயத்து மண்டியிட
மருமகன் பதவி ஏற்பு !
விருந்து படைக்க
தடை நீக்கி
படையெடுத்து வந்தீங்களே..
எச்சில் இலை பாய் விரிக்க !

எழுதியவர் : மு.தருமராஜு (25-Jan-25, 6:40 pm)
Tanglish : perum pulli
பார்வை : 15

மேலே