வேண்டா உறவு
கண்ட கனவு காகிதம் பகிருது
கனிந்த கனி வாயுள் தேயுது
கரந்த பால் கற்கண்டாய் கரையுது
கடல் அலை கம்மலாய் ஒலிக்கிறது
விவரம் தேடும் வேண்டா உறவு
விலாசம் காணா விசமம் வையுது
விருந்து படையல் விரும்பா வேட்கை
விகற்ப எண்ணம் வினையை கவ்வுது
வீட்டுத் திண்ணை நோக்கா வரவை
வீதிவழி வந்தார் வீணா தவழ
வீண் தயவு வீனாய் போக
வீக்கம் காணுது வீழ்ந்த முற்றம் !