ஸ்ரீஜித் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஸ்ரீஜித் |
இடம் | : மார்த்தாண்டம் |
பிறந்த தேதி | : 02-Feb-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 25 |
நான் என்னை பைய்த்தியகாரன் என்பேன்..
எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டாய்...
இருந்தாலும்,
இன்னும் இருக்கிறது
என் இதயத்தில்
உன் நினைவுகள்........!!!
ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இரு வெவ்வேறு துருவங்கள் நாங்கள்..
தவமாய் கிடந்த தாய்
உடன் வருவதில்லை...!
தன்னைத் தந்த தந்தையும்
உடன் வருவதில்லை...!
கனிவாய் கனிந்த காதல்
உடன் வருவதில்லை...!
இனிதாய் இணைந்த இல்லாள்
உடன் வருவதில்லை...!
மனதை மகிழ்வித்த மகனும்
உடன் வருவதில்லை...!
மணமாய் மலர்ந்த மகளும்
உடன் வருவதில்லை...!
போற்றிப் பாடிய பேரர்
உடன் வருவதில்லை...!
நன்மை நல்கும் நண்பன்
உடன் வருவதில்லை...!
கனிவாய் கற்ற கல்வி
உடன் வருவதில்லை...!
பணிவாய் பெற்ற பதவி
உடன் வருவதில்லை...!
படுக்கையில் பரவிய பட்டு
உடன் வருவதில்லை...!
பனிக்காய் போர்த்திய பருத்தி
உடன் வருவதில்லை...!
எனதாய் எண்ணிய எதுவும்
உடன் வரப்போவதில்லை...!
தாய் தந்தை சொல்லி எதுவும் கேக்காத நான் எங்கிருந்தோ வந்த நீ சொல்லி கேட்டது ஏன்? சொல் என் மனமே @ அன்பே !!
காதலின் சுவையை
உணர்கிறேன்
உன்னிடம் சேர்ந்த பிறகு......
ஒவ்வொரு முறையும்
என்னை அதிர்ஷடசாலி என்று நினைத்தேன்
உன்னிடம் இருக்கும் பொழுது .......
என்னை நான் முழுமையாக உணர்தேன்
உன் அருகமையில் இருக்கையில்......
என் நாடி துடிப்பாய்
நீ இருக்கையில் .....!!!
மறந்துவிடு என்கிறாய் .....
நீ .....!!!
வாழ்க்கையை புரிய வைத்த
வசந்த பூங்காற்றே!...
வருட நாட்களையெல்லாம் உனது
வருகைக்காக காத்திருந்த
நாட்களாய் மாற்றிய
உன்னை எப்படி மறப்பது.... ?
கட்டுக்கடங்கா அன்பை பொழியும்
கயல்விழியாலே!...
கல்விநாட்களையெல்லாம் - என்
காதல் நாட்களாய் மாற்றிய
உன்னை எப்படி மறப்பது.... ?
புலப்படாத அன்பை பொழியும்
புன்னகை பூவே!...
கவிஞனாய் இருந்த என்னை
காதல் கிருக்கனாய் மாற்றிய
உன்னை எப்படி மறப்பது.... ?
இது நான் தேடிய வாழ்க்கை அல்ல என்னை தேடி வந்த வாழ்க்கை