எப்படி மறப்பது உன்னை

வாழ்க்கையை புரிய வைத்த
வசந்த பூங்காற்றே!...
வருட நாட்களையெல்லாம் உனது
வருகைக்காக காத்திருந்த
நாட்களாய் மாற்றிய
உன்னை எப்படி மறப்பது.... ?

கட்டுக்கடங்கா அன்பை பொழியும்
கயல்விழியாலே!...
கல்விநாட்களையெல்லாம் - என்
காதல் நாட்களாய் மாற்றிய
உன்னை எப்படி மறப்பது.... ?

புலப்படாத அன்பை பொழியும்
புன்னகை பூவே!...
கவிஞனாய் இருந்த என்னை
காதல் கிருக்கனாய் மாற்றிய
உன்னை எப்படி மறப்பது.... ?

எழுதியவர் : மணிசந்திரன் (11-Apr-14, 7:19 pm)
பார்வை : 263

மேலே