நினைவினிலே
-----------------------------------------
எது உன்னை சந்தோசப்படுத்தும்,
என்கிற சூத்திரமெல்லாம் தெரியாது !
உன் சந்தோசமாகவே,
நானிருந்தது நன்றாக தெரியும் !
கடந்துதான் போய்விடுகிறது காலம் !
காட்சிகளை மூர்க்கமாய் அழித்துவிட்டு !
தடங்கல் அழிந்துபோனாலும்,
என் ஜெபங்கள் இன்றளவும்,...
என் இளமையை அபிசேகித்த உனக்காகவே !
நீதான் !
என் நினைவுகளில் அறையப்பட்ட நிரந்தரச்சிலுவை !!