புல்லாங்குழல்
ஆற்றங்கரை
ஓரம் அரசமரம் தனிமையாக
இசைக்கிறது
ஒரு புல்லாங்குழல்...............!
தென்றலை
வருடிச்செல்லும் இசை
அமுதை சுவைத்து
சுகம் சேர்த்து சுமைதாங்கி
பாடியது தனை
மறந்து தவித்தது.............!
அவள் அருகிலே
இருப்பதை
உணருகின்றான்
மனம் உருகி நின்றான்
குழல் ஓசைவுடன்................!
அவனை
திகைப்பில் என்றுமே
ஆழ்த்துகிறாள்
மறைந்திருந்து மகிமை
காட்டுகிறாள்.............!
அவன் மறவாமல்
அனுதினம் இசைக்க சிரித்த
முகத்துடன்
ஆடுகிறாள்
அவனருகே நிழலாக............!
ஒன்றி உறவாடி
உற்ற உயிரான அவளை
நினைத்து
உருகினான்
மதி மயங்கினான்
கானகத்தில்...........!