மானின் விழி நீலமோ

வானில் வளைந்திடும் வானவில் வண்ணமேழு
வானில் உலவிடும் வண்ணநிலா வோவெண்மை
வானத் துமுகிலின் வண்ணம் எழில்கருமை
மானின் விழிநீல மோ
வானில் வளைந்திடும் வானவில் வண்ணமேழு
வானின் முகில்கரு வண்ணமடி-- தேனாக
வானில் உலவிடும் வண்ணநிலா வோவெண்மை
மானின் விழிநீல மோ