ஏங்கும் மனது

அவள் கருமேகக் குழற் குடை பிடித்த கன்னங்களில் மயங்கி
கயல் விளையாடும் விழிக்குளத்தில் வீழ்ந்து நீந்திக் கரை சேர்ந்தேன்
கன்னல் இதழ்களின் தெவிட்டாச் சுவையில் திளைத்துக் களித்த நான் சுவையூறிய பார்வையை கீழே இறக்கினேன்
இடை தொடர்ந்து தொடர இட்டது தடை
அதில் ஏனோ இத்தனை கஞ்சத்தனம் இறைவா?
வளைவில் தடுக்கி வீழ்ந்த நான் பிரயத்தனப்பட்டு விட்ட இடத்தைப்பிடிக்க சிறிது மேலே உயர்ந்தேன் உறைந்து போனேன்
ஆஹா பிரம்மன் எத்தனை கொடை வள்ளல்
படைப்பதில் எத்தனை சித்து வேலை...
தாராளம் ஆஹா எத்தனை ஏராளம் ஏராளம்
மடை திறந்த வெள்ளமாய் ஏங்கிய மனதை தாங்கிப் பிடிக்க முடியாமல் தவித்தேன்
அஷ்றப் அலி