பெண்ணே

பெண்ணே...!
08 / 08 / 2025

பெண்ணே...
யார் உன் கைகளை கட்டிப் போட்டது?
யார் உன் கால்களில் விலங்கிட்டது?
யார் உன் தோள்களின் சிறகொடித்தது?
யார் உன் எண்ணங்களை சிறையிலிட்டது?
யோசித்துப்பார்.
ஆண்வர்க்க ஆணவம் ஒரு புறம்
அடக்குமுறை சமுதாயம் மறுபுறம்
அவைகள் மட்டுமா உனக்கு எதிரி?
இல்லை மகளே..
உனக்கு எதிரி பெண் சமுதாயமே
சகோதரியாய்..
தோழியாய்..
நாத்தனாராய்
மாமியாராய்..
அவர்கள் மட்டுமல்ல
உனக்கு எதிரி நீயேதான்.
நீயே உனக்குள் இட்டுக்கொண்ட
விலங்குகள்தான்
மூடிக்கொண்ட சிறைக்கதவுகள்தான்.
புரிந்துகொள்.
உன் அறிவு வளர்ந்துவிட்டது.
உன் தொலைநோக்கு பார்வை
வானளவு விரிந்துவிட்டது
இருந்தும்
ஏதோ ஒன்று குறைகிறது.
உன் சுதந்திரத்திற்காக போராடு
மற்றவர் சுதந்திரத்திற்கு வழிவிடு
அவரவர் சுதந்திரத்தை மதித்துவிடு

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (8-Aug-25, 8:43 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : penne
பார்வை : 24

மேலே