Arulmathi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Arulmathi |
இடம் | : தமிழ் நாடு |
பிறந்த தேதி | : 28-Dec-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 856 |
புள்ளி | : 41 |
இந்திய ஆட்சிப்பணி . மத்திய அரசு தொலைத்தொடர்புத் துறையில் இயக்குனராகப் பணிபுரிகிறேன். 2009 ஆம் ஆண்டு ஐ ஏ. எஸ் தேர்வில் வெற்றிபெற்று தற்போது பெங்களூரில் வசித்து வருகிறேன். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளாள்.
ஐ ஏ. எஸ் தேர்வு எழுதுபவர்கள் இலவச ஆலோசனை பெறலாம்.
முக்கண் முதலோனே மூசிக வாகனனே
மாகண் திறந்து அருள்வாய் எனக்கு
துதிக்கிறேன் என்னன்பால் உனையே
வரம்தர வேண்டுகிறேன் எமக்கு !
செம்மொழி செம்மையுற என்பணியும்
ஆற்றிடவே போற்றுகிறேன் உன்னை
அருள்வாய் கணபதியே ஆசி எமக்கு
தெளிந்து தெரிந்திடனும் யாப்பு !
அய்யா கன்னியப்பன் அவர்கள் ஆலோசனைக்கு பின் திருத்திய வடிவமாய்
முக்கண் முதலோனே - பலவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்
முக்கண் முதலோனே மூசிக வாகனனே
மாக்கண் திறந்து அருள்வாய் எனக்கு;
துதிக்கிறேன் என்னன்பால் தூயவன் உன்னை;
வரம்தர வேண்டும் எமக்கு! 1
செம்மொழி எந்நாளும் செம்மையுற என்பணியும்
ஆற்றிடவே போற்றுகிறேன் ஆதரிப்பாய் என்னை
அருள்வா
பார்வை யால் கொல்லாதே
பெருமைமிகு மிப்பெண் ணிருக்கண்கள் ஒப்பா
திருப்பர் பிறபெண்டி ருண்மை -- அருஞ்சமர
கொல்கூர் படையவள் ஓல்கா வவள்கண்கள்
வென்றெ வரையும்சாய்க் கும்
இந்த அழகியின் கண்களுக்கு பிற பெண்டிரின் கண்களை ஒப்பிட முடியாது...
அவளது கண களின் பார்வையானது பெரிய போரில் உபயோகிக்கும் கூரிய வாள்போல
எல்லோரையும் வெட்டிச் சாய்த்து விடும்.
xx குறள் 4
நேரிசை வெண்பா
கொடுமை யுளம்கொண்டான் கோடி மிகினும்
கடுமொழியும் கையிழிவே காட்டும் - நெடுமரமாய்
நின்று கனிநீழல் நீட்டினும் எட்டிதான்
நன்று கனிவாமோ நாடு. 664
- கொடுமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எட்டிமரம் நெடிது வளர்ந்து நிழல் விரிந்து கனி சொரியினும் தீமை மிகுந்தே நிற்கும்; அதுபோல் உள்ளத்தில் கொடுமையுடையவன் வெளியே நல்ல செல்வங்களை எய்தியிருந்தாலும் சொல்லும் செயலும் இழிந்து அல்லலாகவே யிருக்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இனிய பண்பு மனிதனைத் தனி நிலையில் உயர்த்துகிறது. அருள் நீர்மை தோய்ந்த அளவு பெரு மேன்மைகள் வாய்ந்து வருகின்றன. உயர்ந்த சான்றோர
நீங்களும் IAS / IPS ஆகலாம் ! இலவச ஆன்லைன் வகுப்புகள் !
https://www.youtube.com/watch?v=HWecILbgMU8
செழித்துப்படர்ந்திருந்தன
மைதானங்கள்...
பசியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன...
பந்தயக்குதிரைகள்.
எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது
பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை...
காதல் வாய்க்கப்பெறாதவர்களின்
நிலவறை அலமாரிகளுள்
இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு
கைக்குட்டை...!
கொன்றது மழை...
எப்படியும் பிழைத்திடுவோம்..
மிகச் சமீபமாகத் தேர்தல்...
நக்கீரனும் பாண்டியனும்
அறியாதே போயிருந்ததை
ஈசனுக்காவது தெரிவிக்கவேண்டும்...
மண்வாசனை..
அண்ணன் மகளைத்
தலைகோதி.. அக்காள் மகளிடம்
மீசை முறுக்கிவிடுகிறது...
பெண்ணியம்...
அடிமைகள்
ஆராதிக்கப் படுகிறார்கள்...
இன்னுமொரு இறகு
உதிர்த்துப் பறக்க
தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது
நம்பிக்கை ...வை
நம்பிக்கையில்தான்
நகருகிறது
வாழ்க்கை ...!
உன்
நாடி ..நரம்புகளில்
இரத்தவோட்டத்தை
மாற்று...
இளமையாய்
நம்பிக்கையை
ஊற்று...
வறண்ட பொழுதினில்
வாழ்வின் எல்லைவரை
செல்லும் மனது ...
அப்பொழுதினில்
நாளைய உலகினை
நம்பிக்கை வேர்களே
நன்றியுடன் உரைக்கும்
விடிவோம் என்றுதானே
வீழ்கிறான் சூரியன் ...
வளர்வோம் என்றுதானே
தேய்கிறான் சந்திரன் ...
வீழ்ச்சியும்...
தேய்தலும்...
தேகத்திற்குத்தான்..?
ஆனால்
மனதிற்கு ...!
தவறெனில்
'தாய்' புவியின்
தலைவிதியை
மாற்றிவிடு ...
'தரணி' ஆள
தளிர்களுக்கு
தன்னம்பிக்கை
ஊற்றிவிடு ...
காயங்கள்
ஆற
பரிசளிக்கிறேன் என் கண்களை கவிஞர் சி அருள்மதி
http://eluthu.com/kavithai/254982.ஹ்த்ம்ல்
கவி உள்ளங்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன !
பரிசளிக்கிறேன் என் கண்களை !!
வெண் வானில் மிதக்கும்
கரும் பனித்திட்டு.
கருணைக் கதிரோன் வர
உருகி உப்பாகும் உயிர்க்கடல்.
வெண்கடலில் மூழ்காத
கரு முத்து.
மன வீட்டின் இரு கதவு.
இளமையில் குவியமாய்
முதுமையில் குழியமாய்
உருமாறும் ஒளிச்சுடர்.
கூம்புகளும் குச்சிகளும் கொண்டு நெய்த
வண்ணத் திரைச்சீலை
மூடாமல் திறந்திருக்கும் இடமும் வலமும் !
அறுபது வயதான அனுபவக் கண்கள்
அறுவைசிகிச்சைக்குப்பின் 'அ ஆ' படிக்கின்றன
ஐந்து வயதுக் குழந்தையிடம் !
இறந்த பின்பும் ஒளிகொடுக்கும்
விழிச்சூரியன்கள் !
இருட்டுக்குழந்தைகள் இரட்டைபிறவிகளாய்
குருடனின் கண்கள்.
கண்ணீர் சுரப்பி வற
பரிசளிக்கிறேன் என் கண்களை !!
வெண் வானில் மிதக்கும்
கரும் பனித்திட்டு.
கருணைக் கதிரோன் வர
உருகி உப்பாகும் உயிர்க்கடல்.
வெண்கடலில் மூழ்காத
கரு முத்து.
மன வீட்டின் இரு கதவு.
இளமையில் குவியமாய்
முதுமையில் குழியமாய்
உருமாறும் ஒளிச்சுடர்.
கூம்புகளும் குச்சிகளும் கொண்டு நெய்த
வண்ணத் திரைச்சீலை
மூடாமல் திறந்திருக்கும் இடமும் வலமும் !
அறுபது வயதான அனுபவக் கண்கள்
அறுவைசிகிச்சைக்குப்பின் 'அ ஆ' படிக்கின்றன
ஐந்து வயதுக் குழந்தையிடம் !
இறந்த பின்பும் ஒளிகொடுக்கும்
விழிச்சூரியன்கள் !
இருட்டுக்குழந்தைகள் இரட்டைபிறவிகளாய்
குருடனின் கண்கள்.
கண்ணீர் சுரப்பி வற
சாதிவெறி
- கவிஞர் சி. அருள்மதி
என் காதல் கரு
உன்னில் வளர விடாமல்
கருத்தடையாய் உன் சாதி!
சங்கம் வைத்து சாதி வளர்க்கும்
தந்தைக்கு மகளாய் நீ !
சாதிக்கு மட்டும் சவப்பெட்டி செய்யா
சமூகத்தில் சமத்துவம் பேசும் நான் !
நான் உன் உயிரைத் தொட நினைக்கையில்
நீ என் நிழலையும் தள்ளுகிறாய் !
சாதிக்குப் பொட்டிட்டு பூச்சூட்டி
நெற்றியில் ஒற்றைக் காசு வைத்து
பாடைகட்டும் நாள் எந்நாளோ ?
பிறந்து பல நூறு ஆண்டாகியும்
மூப்படைய மறுக்கும்
சாதிச்சதுப்பு நிலத்தில்
உன் விஷ வேர்களால்
நித்தம் மரிப்பது மனிதம் !
சாதிவெறி
- கவிஞர் சி. அருள்மதி
என் காதல் கரு
உன்னில் வளர விடாமல்
கருத்தடையாய் உன் சாதி!
சங்கம் வைத்து சாதி வளர்க்கும்
தந்தைக்கு மகளாய் நீ !
சாதிக்கு மட்டும் சவப்பெட்டி செய்யா
சமூகத்தில் சமத்துவம் பேசும் நான் !
நான் உன் உயிரைத் தொட நினைக்கையில்
நீ என் நிழலையும் தள்ளுகிறாய் !
சாதிக்குப் பொட்டிட்டு பூச்சூட்டி
நெற்றியில் ஒற்றைக் காசு வைத்து
பாடைகட்டும் நாள் எந்நாளோ ?
பிறந்து பல நூறு ஆண்டாகியும்
மூப்படைய மறுக்கும்
சாதிச்சதுப்பு நிலத்தில்
உன் விஷ வேர்களால்
நித்தம் மரிப்பது மனிதம் !