முக்கண் முதலோனே - பலவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்
முக்கண் முதலோனே மூசிக வாகனனே
மாகண் திறந்து அருள்வாய் எனக்கு
துதிக்கிறேன் என்னன்பால் உனையே
வரம்தர வேண்டுகிறேன் எமக்கு !
செம்மொழி செம்மையுற என்பணியும்
ஆற்றிடவே போற்றுகிறேன் உன்னை
அருள்வாய் கணபதியே ஆசி எமக்கு
தெளிந்து தெரிந்திடனும் யாப்பு !
அய்யா கன்னியப்பன் அவர்கள் ஆலோசனைக்கு பின் திருத்திய வடிவமாய்
முக்கண் முதலோனே - பலவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்
முக்கண் முதலோனே மூசிக வாகனனே
மாக்கண் திறந்து அருள்வாய் எனக்கு;
துதிக்கிறேன் என்னன்பால் தூயவன் உன்னை;
வரம்தர வேண்டும் எமக்கு! 1
செம்மொழி எந்நாளும் செம்மையுற என்பணியும்
ஆற்றிடவே போற்றுகிறேன் ஆதரிப்பாய் என்னை
அருள்வாய் கணபதியே ஆசி எமக்கு
தெளிந்து தெரிந்திடனும் யாப்பு! 2