மறந்த சொந்தம் மறைந்த பந்தம்

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.

கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.

ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.

எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.

என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.

மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது தங்கச்சி.

மறக்காம போன உடனே
மஞ்ச பையை தொறந்து பாரு
நான் சேத்து வச்ச காச உன் செலவுக்கு வச்சிருக்கேன்....
--- இது தம்பி.

மறக்காம போன உடனே
உன் பொறந்த நாளைக்கு புது சட்டை வாங்கிகப்பா...
நான் தையல் தச்ச காச
உனக்காக வச்சிருக்கேன்....
--- இது அக்கா.

அன்று...
இதை எல்லாவற்றையும்
மறக்காமல் செய்துவிட்டோம்...

இன்று....
இதை சொன்ன எல்லோரையும்
மறந்து விட்டோம்...

************ ஜின்னா ****************

எழுதியவர் : ஜின்னா (30-Aug-15, 12:44 am)
பார்வை : 9543

மேலே