ஏழை

இவன்,
எதுவுமின்றின் எல்லாம் பெற்றவன்,
பசித்து புசித்தாலும், ருசித்து புசித்தாலும்,
பகுத்துண்ண மறந்ததில்லை...
இவன்,
ஒருநாளும் உழைக்காமல் இருந்ததில்லை..
அதனால் கண்கள் உறங்காமல் விழித்ததில்லை.
கையளவு துணி உடுத்தி,கோவணம் என கட்டி,
இவன் உழைத்து உண்ணையிலே..
ஊர் மெச்சும் கோடியின்பம்..
பிறந்த பயன் அடைந்தானென்று
இவனது,
எளிமையிலும் தூய்மையையும் .
வறுமையிலும் நேர்மையையும்.
காணும்போது
புரிகிறது ஆண்டவன் படைப்பில்.
வாழ்வின் சந்தோசம் எதுவென்று..
இனி ஒரு ஜென்மம் வேண்டும் இறைவா !..
இவனை போல் வாழ்வதற்கு...