கணேச மூர்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கணேச மூர்த்தி
இடம்:  விருதுநகர்
பிறந்த தேதி :  15-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Aug-2015
பார்த்தவர்கள்:  233
புள்ளி:  52

என்னைப் பற்றி...

முடிந்த வரை முயற்சிக்கிறேன்..நான் யார் என்பதை புரிந்து கொள்ள?..

என் படைப்புகள்
கணேச மூர்த்தி செய்திகள்
கணேச மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 11:13 pm

மயில் தோகை கண்கள்
அழகினை அருகில் மிளிர கண்டேன்

என்னவள் என் மடி மீது கிடந்து
இருவிழியால் என் இதயத்தை
வருடிய வசந்த காலங்களில்..

மேலும்

விழிகள் 19-Nov-2016 11:37 pm
மான் விழிகள், மீன் (கயல்) விழிகள், மயில் தோகை விழிகள் கவிதைகளிலும் பாடல்களிலும் இருக்கும் போது ரசிக்கலாம். நடைமுறை வாழ்க்ககையில் அழகைக் கெடுத்துவிடும் விழிகள் அவை. மேலே படத்தில் உள்ள விழகள் அழகானவை. 19-Nov-2016 11:36 pm
வருடலில் மிளிரும் காதல் இதம் அழகு 19-Nov-2016 8:28 am
கணேச மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 11:04 pm

அமிர்தத்தின் சுவையை
அறிந்த அன்றைய தினம்

என்னவளின் எனக்கான
முதல் முத்தம்.

மேலும்

முதல் முத்தத்தில் மட்டும் பண்டைய கவிஞர்கள் படைத்த யாரும் சுவைத்தறியா அமிழ்து இருக்குமோ? 19-Nov-2016 11:28 pm
காதலின் பந்தியில் முத்தங்களே விருந்துகள் 19-Nov-2016 8:27 am
கணேச மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 10:54 pm

உன் மின்னல் பார்வையில்
பூத்த காளான் நான்

அழகாய் மலர்ந்து காத்திருக்கிறேன்

மீண்டும் நீ தீண்டினால்
நான் மீள்வது கடிணம்
என்பதையும் உணர்ந்து.

மேலும்

ஒவ்வொரு நகர்விலும் விதமான போராட்டம் வாழ்க்கையில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Nov-2016 8:23 am
கணேச மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 10:45 pm

தேவையின் தேவையை
தேடி ஓடினேன்,
ஓடி பயனில்லை
என்பதை புரிந்து கொண்டேன்.

நான் தேடி ஓடிய இடத்திலும்
சிறப்பு அர்ச்சனைக்கு
ஐநூறு ரூபாய்
என்ற அச்சிடலால்..

மேலும்

செல்லாத நோட்டையும் செல்லும்படி செய்யும் திறன்மிக்கோர் எதிர்பார்த்துக் காத்திருப்பார். 19-Nov-2016 11:31 pm
இன்று உலகை பணம் தானே ஆள்கிறது 19-Nov-2016 8:22 am
கணேச மூர்த்தி - கணேச மூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2016 2:27 pm

காத்திருக்கிறேன்.

கடல்நீரின் உப்பு கரைந்திட,
கானல் நீரை கையால் பருகிட,
காரிருளின் கருமை நீங்கிட,

காத்திருப்பவன் போல,

காகிதத்தில் உன் நினைவின்
என் கற்பனைகள் கரைந்திடும் வரை
காத்திருக்கிறேன்.

முடியாதென்பதை உணர்ந்த மூடனாய்.
என்றும் உன் அழியா நினைவுகளோடு.

மேலும்

கனவுகள் கூட களைந்துவிடும். நினைவுகள் என்பது மனதுக்குள் உறவாடும். எங்கு நீ சென்றாலும் உன்னோடு பிரியாமல் இருக்கும்.நகமும் சதையுமாய்... 09-Jul-2016 11:57 am
நினைவுகள் என்றும் மனதுக்குள் வாழ்ந்து கொண்ட இருக்கிறது 08-Jul-2016 4:47 pm
கணேச மூர்த்தி - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jul-2016 8:18 pm

பள்ளிப் பருவமதில்
துள்ளித்திரியாமல்
அழகை அள்ளித்திரியும்
உன்னோடு என் காதலைச்
சொல்லித் திரிந்தேனடி
உன் நினைவில்
சொந்தமதைத் தள்ளித் திரிந்தேனடி

பள்ளியறையில்
மல்லிப்பூவதனை
வள்ளி உன் தலை சூட
வெள்ளிதோறும்
பல்லியாய்க் கோயில் சுவற்றில்
ஒட்டிக்கிடந்தேனடி
உன் தலையென எண்ணி
தலையணையைக் கட்டிக்கிடந்தேனடி

உன் ஜதி நடையில்
என் ஜாதி மறந்து
உன் மதியழகில்
மீதி மறந்து
வீதியில் நடந்தேனடி
போதையில் கிடந்தேனடி

காதல் என்ற மூன்றெழுத்து
காதில் நிறைந்ததடி
காமம் என்ற மூன்றெழுத்து
கனவில் நனைத்ததடி

வாலிபமோ சொல்வாங்கி
வாலியோடு வாலிபால் ஆடுதடி
என் வாணிபமோ உள்வாங்கி

மேலும்

அழகு கவிதை 09-Jul-2016 3:39 pm
சாதி வந்து காதலை என்ன செய்யும்? காதல் என்பது ஒரு பகா பதம் என்பதை எப்போது உணரும்! 09-Jul-2016 1:00 pm
நன்றி நண்பரே 04-Jul-2016 6:54 pm
சொற் செட்டு நன்று....!! 04-Jul-2016 6:18 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) KR Rajendran மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Sep-2015 8:03 pm

ஏன் தவித்துக் கொண்டிருக்கிறாய்
என்று கேட்டபடியே எனக்குள்ளிருந்து
வெளியே வந்தான் அவன்...

தாகம் எடுக்கிறது என்றேன்...

தண்ணீர் குடி...
தாகத்தை தீர்க்க தண்ணீரைத் தவிர
வேறெதுவும் இல்லை இங்கு...

முக்கால் பாகம் தண்ணீர்
எங்கும் நிறைந்திருக்கிறது...
இந்த உலகிலும்
உன் உடலிலும்...

உன்னால்
தண்ணீரை தவிர்க்கவோ
தடுக்கவோ முடியாது என்றான்...

ஏ பித்தனே...
அணைகட்டி அடக்கி விட முடியும்...
எங்களால் முடியாதது எதுவுமில்லை என்றேன்...

மயங்கி விழுந்தது
மருத்துவராக இருந்தாலும் - முதலில்
தண்ணீர் தெளித்துதான் தட்டிஎழுப்ப வேண்டும்...

தரம் பார்ப்பதில்லை
தாகம் தீர்ப்பதில்...
நிறம் பார்

மேலும்

மிக்க நன்றி தோழரே.. தங்கள் உணர்தலில் மிக்க மகிழ்ந்தேன்.. 13-Nov-2015 11:35 pm
மிக்க நன்றி தோழரே.. தங்கள் உணர்தலில் மிக்க மகிழ்ந்தேன்.. தங்களை அன்று பார்த்ததில் எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னால் இப்போதும் கூட அளவிட முடியாது... என்னுடைய குடுப்பினை என்றே சொல்வேன்... 13-Nov-2015 11:35 pm
மிக்க நன்றி தோழரே.. தங்கள் உணர்தலில் மிக்க மகிழ்ந்தேன்.. 13-Nov-2015 11:34 pm
மிக்க நன்றி தோழரே.. தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ந்தேன்.. 13-Nov-2015 11:34 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Nov-2014 8:49 pm

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய

மேலும்

உம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை!!! 10-Jul-2017 6:44 am
ஆழமான வார்த்தைகள் 02-Jul-2017 10:50 am
மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன். 22-Sep-2015 2:09 pm
கணேச மூர்த்தி - கணேச மூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2015 6:50 pm

இல்லாத ஒன்றை
இருப்பதாய் நினைத்து
நினைவுலகில்
வாழ கற்று கொடுக்கும்
அனுபவம் அந்த காதல்..

கற்பனையில் கவிதை வரும்
கருமம்.
அது அந்த இருவருக்கும்
மட்டும் இனிமை தரும் .

இம்சைகள் பல இருந்த போதும்
இடையூறுகள் பல வந்த போதும்
கண்கள் தேடும் கண்மணி அவள்
எங்கே என்று ? இந்த காதலினால் .

தனிமை என்பது அகராதியில்
அகன்று போகும்..அவள் எப்போதும்
அருகில் இருப்பதாய் தோன்றும்.
என்றும் நீ கவனிக்கபடுவதாய்
உணர்வாய்.

உண்மையில் அனைவருக்கும்
ஆயிரம் வேலைகள் உண்டு
ஆனாலும் அடுத்த வீட்டுக்காரிக்கு
அவர்களை பத்தி பேசுவதில்தான்
இருக்கிறது இன்பம்..

இந்த காதலினால் ..

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Sep-2015 11:51 pm
கணேச மூர்த்தி - மன்சூர் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 2:03 pm

மல்லிகை பூவை உன் தலையில் சூடி
உன் மடி மீது என்னை சாய்த்து...என்னை
உன் மயக்கத்தில் வைத்தாயடி..

என் உதடோடு உன் உதடை வைத்து
முத்தம் மழையில் என்னை நனைத்து
நித்தம் அன்போடு தந்தாயடி..

என் உடலுக்கு மட்டும் நீ
கரும்பாய்,கற்கண்டாய்,தேனாய்
சுவையாய் சுவைத்தாயடி..

நடு இரவில் நான் உறங்கி விட்டாலும் கூட
என்னை தட்டி எழுப்பி காமத்தின்
உச்சிக்கே அழைத்து செல்வாயடி..

எனக்கு பசிக்கும் போதெல்லாம்
ஊட்டி விட்டு என்னை உற்சாகத்தின்
உச்சிக்கே அழைத்து சென்றாயடி..

என் ஒவ்வொரு உணர்விலும்
நீ ஒரு தாரக மந்திரமாய்
காட்சி தந்தாயடி...என் இனிமையானவளே..

என்னை அயல் நாட்டிற்க்கு அனு

மேலும்

நன்று,..நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்...தொடருங்கள்.. 20-Sep-2015 6:29 pm
கணேச மூர்த்தி - கணேச மூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2015 2:26 pm

மனிதனாய் பிறந்த நாம் ,
மனசாட்சியோடும் பிறந்ததனால்..

ஒவ்வொரு இரவும் இம்சையாய் இருக்கிறது
இன்று நீ என்ன செய்தாய்?
நிம்மதியாய் நித்திரை கொள்வதற்கு?

என்று அது கேட்கும் வினாவிற்கு இன்னும் விடை இல்லாததால் !! ..

மேலும்

உண்மைதான்... எந்த சாட்சியும் இல்லாத போதும் மன சாட்சி இருந்தே தீரும்... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Sep-2015 10:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
Enoch Nechum

Enoch Nechum

இலங்கை
ஹாஜா

ஹாஜா

ஐக்கிய அமீரக குடியரசு
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (17)

மோகனதாஸ் காந்தி

மோகனதாஸ் காந்தி

anniyenthal (madurai) .now I am in ABUDHABI
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (17)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே