தானியேல் நவீன்ராசு - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தானியேல் நவீன்ராசு
இடம்:  கும்பகோணம்,தமிழ்நாடு.
பிறந்த தேதி :  16-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2015
பார்த்தவர்கள்:  1539
புள்ளி:  246

என்னைப் பற்றி...

வார்த்தையில் சுருளா
வாழ்வியல் கோணங்களை
வரிகளாக்க விழையுமோர்
வாலிபக் கிறுக்கன்!

தொடர்புக்கு:

மின்னஞ்சல்: danielnaveenraj@rediffmail.com

என் படைப்புகள்
தானியேல் நவீன்ராசு செய்திகள்
தானியேல் நவீன்ராசு - சிவநாதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2018 12:54 am

மடையனவன் சலத்திலுள்ளே யிருந்தே னென்பான்

மாடுநிற்கும் யோகமல்ல வித்தையாச்சு

சடைவளர்த்தா லாவதென்ன கண்ணை மூடிச்

சாம்பவியென் றேயுரைப்பார் தவமில்லார்கள்”

மேல் உள்ள பாடல் மூலமாக அகத்தியர் கூற விளைந்தது யாது?

மேலும்

உண்மை... பகவான் ரமண மகரிஷி இராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் போன்ற பல ஆன்மீக நெறி நின்ற உண்மையான வாழ்க்கை வழிகாட்டிகள் நம் மத்தியில் இருந்தனர் ..இப்போதும் இருக்கின்றனர் ..இருந்தாலும் எம் மத்தியிலும் இப்போது போலிகளே அதிகம். இந்தப் போலிகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும். 30-Jan-2018 9:10 pm
நன்றி அருமையான விளக்கம்.. 30-Jan-2018 8:35 pm
வித்தை காட்டுபவ்ர்கள் தான் நான் தண்ணீரினுள் இருப்பேன். அப்படி செய்வேன் இதை செய்வேன் என பொய்களை அவிழ்த்து விடுவர். மடையன் தான் அவன்! ஏனெனில் ஒரு எருமை மாடு கூட தண்ணீரினுள் இருக்கும்! அவன் யோகியல்ல! அதுமட்டுமா? தாடி சடை வளர்த்து உத்திராட்சம் அணிந்து காவி உடுத்தி பெரியசாமி என்று தன்னை தம்பட்டமடிக்கும் எவனும் உண்மையான் சாமி அல்ல! மூவாசையை முற்றும் துறந்தவனே, சாமி – யார்? என தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுபவனே, அத்ற்காக ஞான தவ்ம் செய்பவனே சாமியார்! ஆத்மசாதகன்! தவசீலன்! காஷாயம் தரித்து கண்ணை மூடி எவன் எதை செய்தாலும் அதுவும் ஞானமல்ல! தவமல்ல! கண்ணை மூடினாலே தவ்று!? அவன் கண்ணை மூடிட்டான் என செத்தவனைத்தானே சொல்வோம்? கண்ணை மூடி நீ எதை செய்தாலும் நீயும் செத்துதான் போவாய்!? சந்தேகமேயில்லை! “கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலை என கொண்டாடும் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக ” என் திருவருட்பிரகாசவள்ளலா ர் தெளிவாக கூறுகிறார்! இங்கே இந்த பாடலில் அகத்தியரும் கூறுகிறார்.“ கண்ணை மூடி சாம்பவியென்று உரைப்பார் தவமில்லர்கள்” என்றே!? 30-Jan-2018 10:40 am
மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்பார் வள்ளுவர் . சின்னஞ்சிறு இடையில் சாத்திய செய்யபட்டும் பென்னம்பெரிய முலையில் முத்துமாலையும் பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்து தன்னந்தனி இருப்போர்க்கு இதுபோலும் தவமில்லையே ! -----இது அபிராமி பட்டர் சொல்லும் தவம் அன்புடன் மித்திரன் சொல்வது போல் தவ யோக நிலைகளை அரைகுறையாகக் காட்டி ஊரை ஏமாற்றும் போலியர்களை பற்றிய பாடல் இது . கையிலே பிடித்திருப்பதோ ஜபமாலை கக்கத்தில் வைத்திருப்பதோ கன்னக்கோலை ----என்று இன்னொரு கவிஞர் பாடுவார். காவி போத்திய தூய முனிவரின் அருகமர்ந்து உபதேசம் பெற்று முக்தி பெறும் யோக ஞானப் பெருவழி நடப்போர் சித்தமே சிவமென்றும் ஓம் எனும் ஒலியே சிவநாதமென்று தவமியற்றும் தூயமுனிவர்கள் அன்றும் இன்றும் என்றும் இந்நாட்டில் உளர் . இதை ஞானத்திலே பரமோனத்திலே என்று கொண்டாடுவான் பாரதி . 30-Jan-2018 8:38 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jan-2018 10:01 am

என் கண்ணீரோடு பேசுகிறேன்
சமாதிகளின் காணிக்கையில்
இரு சிலுவைகள் வாங்குகிறேன்
மரணப் புத்தகம் வாசிக்கிறேன்
யுகப் பூக்களிடம் கையேந்தி
ஒரு பாடையைக் கேட்கிறேன்
சிறு மின்மினியின் கடிதங்கள்
என்னவளின் சுவாசங்களில்
என் ஆத்மாவாய் பிறக்கின்றது
இருள்மயமான குருட்டு வானம்
என் கனவுகளின் கப்பலை
அருவிகளில் போட்டுப் போனது
குப்பை போல் கனாக்கள்
வயது முதிர்ந்த குகைகளில்
காற்றை தேடி அலைகிறது
கண்கள் எனது கைக்குட்டை
போலியான நியாபகங்களை
பொக்கிஷமாய் முத்தமிடும்
என் காதல் பேருந்து வந்தது
நீர் வீ ழ்ச்சி போல் இதமான
கவிதைகள் தந்து போனது
இதயத்தை நீ தரிசாக்கி
மீத்தேன் தயாரிக்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Mar-2018 2:08 pm
மீண்டும் படிக்க வேண்டும் என்பதை தவிர்க்க முடியவில்லை 03-Mar-2018 10:04 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Feb-2018 10:58 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Feb-2018 10:58 pm
தானியேல் நவீன்ராசு - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2018 10:16 am

தற்காப்பின்
உச்ச நிலையே;
வீரமென
ஏதுமில்லை!
வெற்றித் தோல்வி
தொடரோட்டம்;
வசந்தமென
ஏதுமில்லை!
வினைப் பயனின்
அறுவடையே;
விதியென
ஏதுமில்லை!
தவறி செய்த
பிழையின் மொத்தம்;
தனியே தத்துவம்
ஏதுமில்லை!
ஓருயிராகிட
ஈருடல் வாதை;
காதலென்று
ஏதுமில்லை!
மாடுகள் போல்
நிதம் ஓட்டிடும்
ஆசை;
மடிந்தால் வாழ்க்கை
ஏதுமில்லை!
கழிந்திடும் நாட்களுள்
களித்திடும் நொடிகளே;
ஆயுளென
ஏதுமில்லை!
ஏழாமறிவாய்
மனிதம் ஏற்றிடு;
உன்னதமிங்கு
ஏதுமில்லை!
எளிய சொற்களில்
உணர்ச்சிகள் கொட்டிடு;
இலக்கியம்
வேறேதுமில்லை!
மரபின் பாதையில்
மடமைகள் விலக்கிடு;
பண்பாடிங்கு
ஏதுமில்லை!
பெற்றது மண்ணிடம்.
கற்றது வலியி

மேலும்

தானியேல் நவீன்ராசு - ஜெர்ரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2017 9:21 pm

நமக்கான வாழ்க்கையை . . .
நாம் வாழ நினைக்கும் போதுதான் ,
உலகத்தின் கண்கள் விழித்து கொள்கின்றது . . !

எதை பேசி வாழ்க்கையை புதைக்கலாம் - என்று
காரணம் தேடுவதற்காக . . ! !

Written by JERRY

மேலும்

ம்ம்.. 10-Dec-2017 12:58 am
நன்றி 26-Nov-2017 9:34 pm
உண்மை 26-Nov-2017 9:32 pm
தானியேல் நவீன்ராசு - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2017 9:04 pm

என்
கவிதைகளென்பது
காதலெனும்
அகிம்சை போரில்
உன்னிடம்
தோற்றுப் போக
நான் செய்த
பிரயத்தனங்களை தவிர
பிறரின் பிதற்றல்கள்
போல் பச்சை
பொய்களல்ல...!
**********


நாள்தோறும்
உன்
பெயர் ஒன்றையே
மந்திரம் போல் உச்சரிக்கும்
என்
இதயத்துடிப்பை
வெறும்
"லப் டப்" என்றிடும்
இவர்களுக்கா
புரிந்துவிடப் போகிறது
என் காதலின்
தீவிரம்?!
**********


மருத்துவர்
கொடுத்த
விட்டமின்
மாத்திரையில்
உன் வட்ட
முகத்தினையும்
கிழவியடித்திடும்
வேப்பிலையில்
உன்
கூந்தலின் தீண்டலையும்
காட்டிடும்
காதல் தீவிரம்!
**********


தீவிரமாய்
சண்டையிட்டு
விலகிச்சென்று
மறுநாளே
"என்னோடு பேசாதே!" என
கு

மேலும்

தானியேல் நவீன்ராசு - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2017 9:40 am

காதல்
சிலருக்கு விளையாட்டு
சிலருக்கு வலி
சிலருக்கு ஒளி
சிலருக்கு சிற்றின்பம்
சிலருக்கு பேரானந்தம்
சிலருக்கு ஏமாற்றம்
சிலருக்கு கௌரவம்
சிலருக்கு பொழுதுபோக்கு
சிலருக்கு உயர்வு
சிலருக்கு தாழ்வு
சிலருக்கு புனிதம்
பலருக்கு வாழ்க்கை
இந்த வரிசையில்
என் காதல் உனக்கு எது...?

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ... 25-Nov-2017 11:23 am
புனிதமாகதான் இருக்ககூடும்! தொடர்ந்தெழுதுங்கள் வாழ்த்துக்கள்! 25-Nov-2017 9:30 am
தானியேல் நவீன்ராசு - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2017 2:44 pm

இதழோடு இதழ் சேர்த்து
புது வேகம் நீ ஏற்று!
விரலோடு விரல் கோர்த்து
சுக ராகம் நீ மீட்டு!
கடைவிழியின் கனிவுகளில்
நீள்காயம் நீ ஆற்று!
தவமிருந்த விடியலிதின்
வெள்ளியென வந்தவளே
அர்த்தசாம வேளையிலும்
அகலெனவே துலங்கவா!
வறண்டுவிட்ட
பாலையிதை
சோலையாக்கும்
புதுப்புனலே
கோடை இவன் காணாமல்
கார்க்குழலால்
போர்த்த வா!
நேற்றுவரை என் வானை
மூடி நின்ற பனி மூட்டம்
கதிரொளியாள்
உன் வரவால்
மழைக்குளிராய்
தேய்கிறதே!
கற்பாறை கோட்டையென
நான் செய்த ஓர் மனது
மகிழம்பூ இதழ்களென
உன் வழியில் உதிர்கிறதே!
சிற்றிடையின்
நளினம் போல்
சேர்த்து வைத்த
ஆசையெல்லாம் சொல்ல ஒரு மொழியின்றி கூறாமல் சாகிறதே!
வேற

மேலும்

தானியேல் நவீன்ராசு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2017 10:31 am

உன்
அரும்பு பல்வரிசையின்
ஒளிச்சிதறலில்
சிதைந்த நொடி
எனக்குள்
படைக்கப்பட்டதே
உனக்கான
என் உலகங்கள்!
**********

நீ
சிந்திவிட்டு போன
புன்னகையை எல்லாம்
சிறுக சிறுக
சேமித்ததால்
பெரும் கடன்காரனாகி
நிற்கிறேன்
காதலில்!
**********

"நீ பொய் பேசும்
கவிதைக்காரன்
என்பதால் உன்னை
பிடிக்கவில்லை" என்ற
உன் கண்கள்
சொல்லி சென்றது
நீதான்
என்னை விட
பெரிய பொய்க்காரி!
**********

பக்கம் பக்கமாய்
எனை படித்து
முடித்த பின்பும்
"ம்...உங்களபத்தி
சொல்லுங்க" என்று
கேட்க
எப்படித்தான்
மனசு வருகிறது
உனக்கு?
**********

மலர்த்தேகம் தீண்டி
யுகத்தாகம்
தீர்க்கத் துடிக்கும்
மழைக்கு குடை

மேலும்

தங்களின் மேலான வருகைக்கும் வாசிப்பிற்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள் பற்பல! 24-Nov-2017 3:16 pm
தங்களின் மேலான வருகைக்கும் வாசிப்பிற்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள் பற்பல! 24-Nov-2017 3:14 pm
தங்களின் மேலான வருகைக்கும் வாசிப்பிற்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள் பற்பல! 24-Nov-2017 3:13 pm
அருமை . அருமை . 22-Nov-2017 9:47 am
தானியேல் நவீன்ராசு - புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2016 6:57 pm

மூவண்ண கொடியை
கருப்பு வெள்ளை
இரு வண்ணமாக்கி
இரு கண்ணில் காட்டியவளே

காரணம் இதுவோ
தேசப்பற்று கொண்ட நான்
உன் மீது
நேசப்பற்று கொள்ள

நீ
காஷ்மீர் சென்றால்
இமயம் குனிந்து பார்க்கும்
கண்ணியா குமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த கண்ணியா குமாரி என்று

அவள் எல்லையில்
நடந்தால் சேலையில்
தீவிரவாதமோ விறகாகும்
காதலெனும் சூளையில்

உன்னை
கண்டபின் தான்
தெரிந்தது
அன்னம் அழியவில்லை என்று

இனியவளே
நீ கடித்து துப்பிய
கரும்பு
எரும்புக்கு
விருந்து

நீ கடித்த மிளகாயை
குழம்பில் போடாதே
இனித்துவிடப் போகிறது

வள்ளுவரின்
ஒன்னரை அடி
நடையை வ

மேலும்

சிறந்த கற்பனை. அருமை நண்பரே வாழ்த்துக்கள் ... 13-Jul-2016 12:53 pm
உங்கள் காதலின் ரசனை மிகவும் அழகானது அதை விட கவிதையின் சொல் நயம் அட்புதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jul-2016 5:45 am
காதலும் வரிகளும் அருமை! தொடர்ந்து கனவு காணுங்கள் அதில் இன்னும் கிடைக்கும் புலமை! அமு, அபி என்பது நல்ல உவமை! 12-Jul-2016 10:20 pm
நன்றி நண்பரே 12-Jul-2016 7:13 pm

வானம் பொழிந்தால்
வாழும்...
பொய்த்தால் வீழும்...
பொட்டல் காடாய்
எம் வாழ்வு!
நீர் பட்டால் துளிர்க்கும்...
இன்றேல் இறக்கும்...
பச்சை தளிராய்
எம் வாழ்வு!
தூக்கும் துக்கமும்
இடும் போட்டி
தூக்கம்
இடைவெளி நிரப்பிடுது!
பண கொட்டமடித்திடும்
பெருங்குடியே!
எம் பட்டினி
தீர்வதெப்போது?
ஒன்பதாயிரம் கோடி
பத்தாயிரம் கோடி
ஏய்த்த வழக்கில்லை!
வாங்கிடும்
ஒன்பதாயிரம்
பத்தாயிரம்
கடனதிலும்
பைசா பாக்கியில்லை!
நாமம் போடும்
பெருந்தொழிற்
முதலைகள்
மறுகை அரசே
நீட்டிடுது!
வயிறு நிறைக்கும்
புண்ணிய தொழிலிதை
மானியந்தானே
நடத்திடுது!
இடக்கை வாங்கி
வலக்கை விற்கிறான்
உருப்படி
இருபது இலாபம்
அவனு

மேலும்

அருமை 21-Jan-2017 4:52 pm
வரவிற்கும்...வாசிப்பிற்கும் நன்றிகள் பற்பல!!! 12-Jul-2016 6:59 pm
உண்மை.இங்கு அடிப்படையிலேயே சில கட்டமைப்புகளில் மாற்றம் வேண்டும்! குறைந்தது பள்ளி பருவத்திலேயே நீதி போதனை,தூய அரசியல் ஆகியவிரண்டையும் நடைமுறையாக்கல் நிகழ்காலத்தின் தவிர்க்கவொண்ணாத் தேவை!! வரவிற்கும்...வாசிப்பிற்கும் நன்றிகள் பற்பல!!! 12-Jul-2016 6:54 pm
நாம் தானே தேர்ந்தெடுக்கிறோம் அந்தத் தந்திர குள்ளநரிகளை தலைவனாய்... அவன் ஏமாற்றுகிறான் என தெரிந்த பின்னும்... அவன் முதலைக் கண்ணீரைப் பார்த்தவுடம் மீண்டும் எமாளியாய்.... நாம் இருக்குவரை...தினமும் புலம்புவதுதானே உழவனின் வாழ்க்கை! 12-Jul-2016 1:06 pm
தானியேல் நவீன்ராசு - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2016 6:16 pm

நீ யாரென்று
எனக்கு தெரியாது!!!- நாம்
பழகவுமில்லை, விலகவுமில்லை - இருந்தும்
ஏதோ ஓர் பிரிவு -உன்
மறைந்த செய்தி கேட்டு......

வரிகளின் வார்த்தைகளில்
வாழ்த்து வாங்கிய என் கவிதை வரிகள்
ஏனோ என்னை அறியா கண்ணீருடன் விரிகிறது.......
உன் கடைசி நிமிட கதறலை எண்ணி

பெண்மை போற்ற - பெண் சிறக்க
பெண்ணை போற்றி பாட்டமைதான்
பெண்ணை தெய்வங்கள் என்றதாலோ
உன் போன்ற தெய்வங்களை உருவாக்க துடிக்கிறது
பாரதி நேசித்த இப்பூவுலகம்......

அகிம்சை வழி சுதந்திரம் பெற்றதாலோ
இன்னும் நமை அமைதி பேதைகளாக்கி
பாவிக்க சொல்கிறது தேசம்......
அகிம்சை வழி வந்த காந்தியும்
இக்கொடுமை கண்டு - சூலம் ஏந்தி நின்ற

மேலும்

நன்றி சகோதரி 06-Jul-2016 4:38 pm
வாடா போடா என்று வார்த்தை தவறினால் வாழ்க்கை தவறும் என்றுரைப்பார் மரியாதை கொடுக்கும் இடத்தில் என்றுமே மரியாதை தவறுவதில்லை தவறாக கருதப்படுவதில்லை சுயமரியாதை வேண்டும் இடத்தில் நாம் மரியாதை செய்வோம் ...!! 05-Jul-2016 5:47 pm
பெண்ணிற்கும் மனம் உண்டடா!!!! பாவிகளா பெண்ணை போற்ற தவறினாலும் மதிக்க பழகடா..... இல்லையேல் அவளை வாழவிடடா......... அருமையான வரிகள் முத்து செல்வி... மனம் மிகவும் வேதனைக்குள்ளாகின்றது 05-Jul-2016 5:08 pm
நன்றி தோழமையே 05-Jul-2016 2:44 pm

உன் இருவரி இடையினில்
இதழ்களின் வளைவினில்
இருப்பதெல்லாம் யார்?
நான்! நான்! நான்!
உன் வல்லின மெய்யினில்
வாலிபத் திமிரினில்
வாழ்வதெல்லாம் யார்?
நான்! நான்! நான்!
தென்றல் தீண்டிப் போகும்
பசு நாற்றாய் கவிழும்
உன் விழிகள்!
ஒரு நொடி பாட
ஆறா? நூறா?
இல்லை மொழிகள்!
நெஞ்சில் கொஞ்சிப்
போகிடும்
மிஞ்சியின் புலரலில்
என் லயங்கள்...
பேசாமல் பேசிடும்
பார்வைகள் எட்டா
அதிசயங்கள்!
பொய்மான் வேட்டையில்
மரித்தே போனது
மழலை மொழியினில்
ஒரு சிணுங்கல்...
உன் கைவரி ரேகையில்
கைவளைச் சாயலில்
உள்ளதெல்லாம் யார்?
நான்! நான்! நான்!
நீ உறிஞ்சிடும்
கோப்பையில்
முறித்திடும் சோம்பலில்
உறங்குதடி என் காத

மேலும்

வரவிற்கும்...வாசிப்பிற்கும்...வாழ்த்திற்கும் நன்றிகள் பற்பல தோழரே!!! 29-Jun-2016 9:20 pm
வரவிற்கும்...வாசிப்பிற்கும்...வாழ்த்திற்கும் நன்றிகள் பற்பல!! 29-Jun-2016 9:18 pm
வரவிற்கும்...வாசிப்பிற்கும் நன்றிகள் பற்பல!!! 29-Jun-2016 9:15 pm
அருமையான வரிகள் அழகு! வாழ்த்துக்கள் .... 29-Jun-2016 11:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

இனியன்

இனியன்

அதிராம்பட்டினம், thanjavur
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (40)

இவரை பின்தொடர்பவர்கள் (31)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
மேலே