தலைப்பு இல்லா கவிதை
நீ யாரென்று
எனக்கு தெரியாது!!!- நாம்
பழகவுமில்லை, விலகவுமில்லை - இருந்தும்
ஏதோ ஓர் பிரிவு -உன்
மறைந்த செய்தி கேட்டு......
வரிகளின் வார்த்தைகளில்
வாழ்த்து வாங்கிய என் கவிதை வரிகள்
ஏனோ என்னை அறியா கண்ணீருடன் விரிகிறது.......
உன் கடைசி நிமிட கதறலை எண்ணி
பெண்மை போற்ற - பெண் சிறக்க
பெண்ணை போற்றி பாட்டமைதான்
பெண்ணை தெய்வங்கள் என்றதாலோ
உன் போன்ற தெய்வங்களை உருவாக்க துடிக்கிறது
பாரதி நேசித்த இப்பூவுலகம்......
அகிம்சை வழி சுதந்திரம் பெற்றதாலோ
இன்னும் நமை அமைதி பேதைகளாக்கி
பாவிக்க சொல்கிறது தேசம்......
அகிம்சை வழி வந்த காந்தியும்
இக்கொடுமை கண்டு - சூலம் ஏந்தி நின்றிருப்பான்
உன் எதிரில் சிலைகளாய் - அமைதி வேண்டாம்
ரௌத்திரம் பழகுயென்று......
அன்பு அழகிய சொல்
விட்டு கொடுக்க பழக்குவது
நேசிக்க மட்டும் தெரிந்தது
எதிர்பார்ப்புகள் இல்லாதது
இது புரியா சிலரின் அன்பு
வாழ்வை இழக்க செய்கிறது......
பெண்ணிற்கும் மனம் உண்டடா!!!!
பாவிகளா பெண்ணை போற்ற தவறினாலும்
மதிக்க பழகடா..... இல்லையேல்
அவளை வாழவிடடா.........
-மூ.முத்துச்செல்வி