மூமுத்துச்செல்வி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மூமுத்துச்செல்வி
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  12-Jan-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Jul-2012
பார்த்தவர்கள்:  2805
புள்ளி:  545

என்னைப் பற்றி...

தமிழ் வார்த்தைகள் தந்த நேசம் கவிதைகளாய் என் வரிகள். பட்டதாரிக்கும் பட்டம் தந்த என் தமிழ் அன்னை.
https://pearlkavithaikal.blogspot.in/ இது என்னுடைய கவிதைகளின் முகவரி

என் படைப்புகள்
மூமுத்துச்செல்வி செய்திகள்
மூமுத்துச்செல்வி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2019 7:29 pm

என்னவென்று நான் சொல்ல
உன்னை பற்றி
என் எண்ணம் எல்லாம்
நீயே
திங்கள் குளிர் தந்தாய்
செவ்வாய் செழுமை தந்தாய்
புதன் புனிதம் கற்பித்தாய்
வியாழன் விடியல் அளித்தாய்
வெள்ளி வெற்றி தந்தாய்
சனி சகலமும் தந்தாய்
ஞாயிரு ஞாபகம் ஆனாய்...
கிழமைகள் உன்னை தேட
கிடைத்த பொக்கிஷமே...

- முத்துச்செல்வி துரை

மேலும்

மூமுத்துச்செல்வி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2019 8:11 am

விவசாயம் விழ்கிறது
தலைதூக்க வாரிர்
என்று கூவுவதைவிட...

மனம், பணம் இருப்பவர்
விவசாயியை, விவசாயத்தை
தத்து எடுக்கலாமே...

விவசாயம் அழியாது
விவசாயியும் அழியமாட்டார்

அரசியல் செய்வது விடுத்து
நிவாரணங்கள் தருகிறோம்
தள்ளுபடி செய்கிறோம்
என்று கூறாமல்
விவசாயத்தையும, விவசாயத்தையும் தத்து எடுப்போம்!
விவசாயம் வளரட்டும் பசுமையுடன்...

- மூ.முத்துச்செல்வி

மேலும்

மூமுத்துச்செல்வி - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2019 6:52 am

ஊடல் ஊறும் வேளை

கூடல் தந்தாய்

கூடலில் நான் திளைத்திருக்க

மனகடலில் மகிழ்ச்சி தந்தாய்

என் எண்ணங்கள் முழுவதும்

நீ இருக்க

வண்ணங்கள் நிறைந்தது வாழ்க்கை

ஆதி நீ

அந்தமும் நீயே!

என் முடிவும் நீயே!

தோல் சாய்ந்திடும் நேரம்

தோல்விகள் இல்லை - உன்னுடன்

துயில் கொள்ளும் நேரம்

துன்பம் இல்லை.

தோழன் என நீ இருந்தால்

தோள்களின் வலிமையை நான் அறிவேன்

வழித்துணையாக நீ இருந்தால்

வழிகளின் சுவடுகள் நான் அறிவேன்

இயற்கையென நீ இருந்தால்

இன்பம் பல நான் அறிவேன்

உதயம் என நீ இருந்தால்

உருகும் உயிர் என நான் இருப்பேன்.

அணைத்துமாக நீ இருந்தால்

கணவனே உன் கரம் பற்றி

மேலும்

நன்றி தோழரே! 15-Feb-2019 6:48 pm
அருமை... 12-Feb-2019 10:29 pm
மூமுத்துச்செல்வி - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2019 6:45 am

உன் மூச்சுக்காற்று

தென்றல் ஸ்பரிசத்தில்

வாழ்ந்திட ஆசை...உன் கண்களில்

அழகிய பிம்பமாய்

இருந்திட ஆசை...உன் நெற்றி

வியர்வையில் துளிகளாய்

விழுந்திட ஆசை...உன் உதடின்

கொஞ்சிடும் முத்தங்களாய்

சிந்திட ஆசை...உன் இதய துடிப்பில்

என் பெயர்

துடித்திட ஆசை...உன் பாதங்கள்

படைக்கும் பாதைகள்

நானாக ஆசை...- மூ.முத்துச்செல்வி

மேலும்

நன்றி தோழரே! 15-Feb-2019 6:48 pm
நன்று 13-Feb-2019 10:56 pm
மூமுத்துச்செல்வி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2019 7:41 am

நிமிடங்கள் நகரும்
இவ்வாழ்வில்
என் நிமிடம் மட்டும்
தாளமிட்டு ராகம் இசைக்கிறது
அவன் என் அருகில் இருப்பதால்...

நாட்கள் செல்ல செல்ல
நாடகாட்டியும் காணாமல் போக
நான் மட்டும் நிற்கிறேன்
அவன் தந்த காதலுடன்...

நிலவை தேடும் மேகமாய்
அவனின் நினைவை தேடுகிறது
காதல் மனம்...

சந்திக்கும் நேரம் குறைவு!
சிந்திக்கும் நேரம் அதிகம்!
சில நேரங்களில்
சந்தித்தும் அவனை மட்டும்
சிந்திக்கிறது மனம்...

- மூ.முத்துச்செல்வி

மேலும்

மூமுத்துச்செல்வி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2019 6:55 am

காதல் சொல்லும் கண்கள்

பார்த்திட துடிக்கிறதே!உதடு பேசிய மொழிகளில்

முத்தங்கள் சிந்திய தருணங்களைபார்வைகளில் காதல் விரித்தேன்

பார்க்காமல் நீ தந்த காதல்பிரிவில் தெரியும் உண்மை காதல்

ஆம்

என் மனம் உன்னை மட்டும் தேடுகிறது...

எப்போது உன்னை சந்திப்பேன்...காதல் மணவாளன்

காலமெல்லாம் இந்த காதலுடன்

நான்!-மூ.முத்துச்செல்வி

மேலும்

மூமுத்துச்செல்வி - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2018 2:02 pm

வான்மதி கொஞ்சும்
வான்பொழுது
மெல்லிய மூச்சுக்காற்று
வருடும் தருணம்
வானவில் உதடுகள்
நெற்றியில் முத்தமிட
மலர்ந்தது காதல்...
சிறு கோபங்கள்
சிறு சலனங்கள்
இருந்தும் புன்னகைக்கும்
காதல்...
உதட்டில் உருளும்
புன்னகை...
விரிகிறது நாட்களின்
தொடக்கம்...
என்னவன்
அவன்தான்...
மார்கழி குளிரில்
பூத்த மலர்தான்...

- மூ.முத்துச்செல்வி

மேலும்

நன்றி சகோதரரே! 17-Oct-2018 5:22 pm
மார்கழி குளிரில் பூத்தவனுக்கு என் வாழ்த்துக்கள் .. அருமை 17-Oct-2018 1:52 pm
மூமுத்துச்செல்வி அளித்த படைப்பில் (public) ileval5b6d527438b7b மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Aug-2018 7:36 am

யாருக்கு வேண்டும் இந்த சுதந்திர தினம்?
யாரிடமும் இல்லை சுதந்திரம்
சுதந்திரம் யாரிடம் உள்ளது
பெண்கொடுமை, வன்கொடுமை
இதிலுள்ள சுதந்திரம்
ஆடம்பரத்திற்கு பிறர்
ஆடைகள் களவுகொள்வதில் சுதந்திரம்
திரையில் இரட்டை வசனத்தில்
சுதந்திரம் -வளரும் தலையும்
உச்சரிப்பதில் சுதந்திரம்
போலிகள் பின் செல்லும்
அரசியலில் சுதந்திரம்
இறைவன் என்ற பெயரில்
இம்சைகளுக்கு சுதந்திரம்
பொருளாதார பதாளத்திற்கு
சுதந்திரம்.
மக்கள் வெள்ளத்தில்
தவிக்கும் போது
இங்கு சுதந்திர தினமும் வேண்டுமோ!
தியாகிகளின் நினைவுதான்
சுதந்திர தினம்
மறுக்கவில்லை
ஆனால் இங்கு
நாங்களே திராணியின்றி இருக்கிறோமே

-மூ.முத்துச்செல்வி

மேலும்

நிதர்சனம் 07-Sep-2018 2:07 pm
உண்மைதான் ஐயா! நாம்தான் பறக்க கற்றுக்கொடுக்க வேண்டும். பறக்கும் பறவைகளின் சிறகை சின்னாபின்னமாக்கி பறந்து போ என்றால் என்னசெய்வது! நம் அடுத்த தலைமுறைக்கு யார்தான் சொல்லிக்கொடுப்பது! சுதந்திரம் வாங்கி தந்த தியாகிகள் மீது கோபம் இல்லை ஆனால் இன்று சுதந்திரம் இழந்தவர்களுக்குத்தான் இந்த படைப்பை சமர்பித்தேன். 16-Aug-2018 1:27 pm
கற்றோரோ திருந்தாதபோது கல்லாதவரை யார் திருத்த முடியும் ? 15-Aug-2018 11:12 pm
சுதந்திரம் ஒற்றுமை ஓங்க, வளம் பெருக, மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை காக்க. தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும் சலுகைகள் நாட்டின் முதுகெலும்பான வேளாண்மைக்குப் போதிய அளவில் கிடைப்பதில்லை. மக்களும திருந்தாமல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு நெகிழிப் பைகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்களுக்கும் குளிர்பானங்களுக்கும் பேராதரவு தந்து வருங்கால சமுதாயத்தையும் நாசமாக்குகிறார்கள். இவர்களை யார் திருத்துவது? 15-Aug-2018 11:10 pm
மூமுத்துச்செல்வி - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2016 7:18 pm

எதிரில் இருக்கும்
எதிரியை எதிர்த்தாய்
உள் இருக்கும்
துரோகியை மறந்தாய்
உன் இறுதியில் அழுதவன்
எதிரியாய் நீ நினத்தவர்கள்தான்
அன்புக்குள்ளவர் என்று நினைத்தவர்கள்
கண்கள் களங்ககூட இல்லையே !!!
ஏன் இந்த துரோகிகளை நம்பி
பொறுப்பை விட்டாய்.....
உன் கண்ணசைவுக்கு
கட்டுப்பட்ட கூட்டம் கொண்ட
அன்பு எங்கே....
ஏமாந்தது நீயா? இல்லை நாங்களா?
புரியவில்லை சொல்லி செல்ல
மறுபிறவி எடுப்பாயா???
எங்களுக்கு அரசியலின் கதை
தெரியாது இருந்தும் - உன்
உடல் கண்டு கலங்கினோம்.....
கடைசி நிமிடமும் இவர்களுடன்
உங்கள் வாழ்க்கை....

-மூ.முத்துச்செல்வி

மேலும்

மூமுத்துச்செல்வி - jayapraba அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2015 1:23 pm

வெல்ல பாதிப்பில் தவித்த அத்தனை மக்களுக்கும் உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

மேலும்

அழகான ஓவியம் 26-Mar-2016 2:37 pm
நிகழ்வுகளின் எதார்த்தத்தை கூறும் அழகிய படைப்பு.. 09-Dec-2015 1:41 pm
அழகான ஓவியம் 09-Dec-2015 10:42 am
அழகாக வரைந்து உள்ளீர் உதவும் கரங்களை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2015 10:13 am
மூமுத்துச்செல்வி - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2015 2:14 pm

அகண்ட உலகில்
அடிமையாய் அகபட்டேன்
அவள் விழி சிறையில்..........

முகம் பார்த்ததில்லை
கண்களின் கவிகளை மட்டும்
காதலித்தேன்.......

முகத்திரை அகற்ற மறுப்பவள்
விழித்திரையில்
வீழ்ந்திட்ட என் விழிகள்........

பறந்திடும் கரும் பட்டாம் பூச்சி
வட்டமிடும் அவள் கண்கள்
வசீகர பார்வை........

கண்களில் விழுந்த -என்
காதல் கவிதையில்
காலம் செல்கிறது

ஆதாயம் தேடும் உலகில்
ஆகாரம் இன்றி அலைகிறேன்
அழகிய விழி கொடுத்த கனவில்.......

-மூ.முத்துச்செல்வி

மேலும்

மிக மிக நன்று 10-Nov-2018 4:12 pm
மூமுத்துச்செல்வி - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2014 7:32 pm

தனிமை தவழ
தனித்திருந்து சிந்திக்கிறேன்...
தனிமையை...

தவிப்பது நான்
உள் துடிப்பது
நீயாக இருப்பதால்...

இடிகளின் இன்னலில்
கிழியும் மேகமாய்
கிழிந்தது உள்ளம்....

பிறக்கின்ற
குழந்தை அழுக்குரலாய்
ஒரமாய் உள்
அழும் மனம்.......

-மூ.முத்துச்செல்வி

மேலும்

அருமை தோழி 06-Jul-2018 11:02 pm
வாசித்தமைக்கு நன்றி அய்யா! 16-Oct-2014 4:39 pm
கவிதை உணர்வுபூர்வமானதுதான்..உரியவர்களுடையதாயிற்றே! 16-Oct-2014 10:30 am
நன்றி 10-Oct-2014 7:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (117)

இவர் பின்தொடர்பவர்கள் (119)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (119)

pawankumar

pawankumar

Erode
vishnukumar

vishnukumar

palani
Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே