ஆழிசரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆழிசரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2019
பார்த்தவர்கள்:  2008
புள்ளி:  16

என் படைப்புகள்
ஆழிசரன் செய்திகள்
ஆழிசரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2019 11:00 am

வெளிரும் ஒளியில் பகலாவேன்
துளிரும் மலரில் துகளாவேன்

பெய்யும் மழையில் துளியாவேன்
செய்யும் செயலில் வெளியாவேன்

இரவில் இருளில் நிலவாவேன்
உறவில் உன்னில் அன்பாவேன்

கருவில் சிசுவின் தாயாவேன்
தெருவில் தென்றல் காற்றாவேன்

நான் யார்?

மேலும்

ஆழிசரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2019 8:01 am

பார்வை நோக்கி - வெளி
பார்வை பறித்து

இரவு போக்கி - ஆழ்ந்த
உறக்கம் பொய்த்து

உறவு ஊக்கி - நிஜ
உறவுகள் மறைத்து

திறமை தீட்டி - உள்
திறனை தீர்த்து

நேரம் தாக்கி - உன்
நேரம் நீர்த்து

கண்கள் காட்சி - நம்
கவனம் கலைந்து

விண்மீன் மீட்சி - எங்கே
கருப்பு வலையமாய் எனது போன்

*கருப்பு வலையம் = பிளாக் ஹோல்

மேலும்

ஆழிசரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2019 11:54 pm

தோழரே என்றது கம்யுனிசம்
நுகர்வோரே என்றது கேபிட்டலிசம்

குழந்தைகளே என்றது கிறித்துவம்
சகோதரா என்றது இஸ்லாம்

பக்தர்களே என்றது இந்துயிசம்
புத்தர்களே என்றது புத்திசம்

பாட்டாளி என்றது சோசியலிசம்
வாக்காளர் என்றது ஜனநாயகம்

எத்தனை அழைப்புகளில்
எப்படி சிக்கி கொண்டாலும்
சிகிச்சை பலனின்றி
சிதைவது மானுடம்

மேலும்

ஆழிசரன் - ஆழிசரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2019 1:08 am

ஆப்பிள் மட்டும் வீழவில்லை
நீயும் வீழ்ந்தாய்
பூமியின் காதலனாய்
புவியீர்ப்பு சக்தியால்

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றிகள் 19-Feb-2019 12:00 pm
விஞ்ஞான அறிவியல் காதல் இலக்கணம் படைப்புக்கு பாராட்டுக்கள் 16-Feb-2019 5:35 pm
ஆழிசரன் - ஆழிசரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2019 2:24 am

நாளை வரும் - புது
நாளை வரும்
நயமாக பேசி

வேளை வரும் - உன்
வேலை வரும்
வேஷம் பூசி

சேலை வரும் - பண
ஓலை வரும்
நீ ஆகதே வேசி

காலை வரும் - பொன்
மாலை வரும்
நன்றாக யோசி

சாலை வரும் - தேன்
சோலை வரும்
நாட்டை நீ நேசி

தேதி வரும் - நல்ல
சேதி வரும்
உன் பிள்ளைகள் சாட்சி

எதிர்காலம் வரும்
புதிர் கோலம் வரும்
புது வாழ்வே காட்சி

நல்ல கல்வி கேளு
விண்ணை வெல்ல பாரு
அதுதான் உண்மை புரட்சி

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றிகள் 19-Feb-2019 11:59 am
சி கவிதை அலங்காரம் புதுமை தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 16-Feb-2019 5:33 pm
ஆழிசரன் - ஆழிசரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2019 7:43 am

தேர்தல் வருகுது
தேசம் குலுங்குது
தெய்வங்கள் வீதியிலே

வார்த்தை பெருகுது
வளர்ச்சி தெரியுது
கட்சிகள் மேடையிலே

மண்ணில் அமர்ந்து
மானிடம் சாகுது
மேலே ஆடையில்லை

தண்ணீரின்றி
தாமிரபரணி
காவிரி அழுகின்றது

தன்னிறைவென்று
தம்பட்டம் பேசி
தன்னை உயர்த்தியது

வெண்பட்டு உடுத்தி
உன் நிலம் நோக்கி
வேகமாய் வருகுது பார்

கிணறு தோண்டி
உன்னை புதைக்க
பூதம் வருகுது பார்

மந்திர சீட்டு
உந்தன் கையில்
மாயங்கள் செய்வதைப் பார்

தந்திரம் காட்டி
தரணி ஆள
தாயங்கள் உருட்டுது பார்

நாடு உயர்ந்தால்
நாமும் உயர்வோம்
நல்லவர்கள் கைகளைப் பார்

போடு ஓட்டை
பொங்கி எழுந்து
தூங்கும் சிறுபி

மேலும்

nitharsanamaana unmai 04-Mar-2019 12:06 pm
அருமை அருமை வாழ்த்துகள்.. 04-Mar-2019 11:48 am
தங்கள் கருத்துக்கு நன்றிகள் 19-Feb-2019 11:59 am
வாழ்வியல் அரசியல் கவிதை தேர்தல் கால விழிப்பு உணர்வுப் படைப்பு பாராட்டுக்கள் 16-Feb-2019 5:29 pm
ஆழிசரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2019 3:44 pm

மாணவனின் கணிதம்
காட்டுவாசியின் ஓவியம்

மேலும்

சமூக வாழ்க்கை மாணவன் -காட்டுவாசி ஒப்பீட்டு கவிதை அமைத்து வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் 19-Feb-2019 5:58 pm
ஆழிசரன் - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2019 8:05 am

உன் இடை அதுகண்டு உடுக்கையும் ஒலி இழக்கும்
********************************************************************************
பண்ணிடைத் தமிழாய் பழத்தின் சுவையாய்
கண்ணிடை மணிவிழியாய் கடுவிருள் சுடரொளியாய்
விண்ணிடை மகிழ்விக்கும் எழுவண்ண பாணமாய்
மண்ணிடை என்தனக்கு கிடைத்திட்ட பொன்மகளே
உன்இடை அதுகண்டு உடுக்கையும் ஒலியிழக்கும்
நின்நடைக்கு ஈடின்றி அன்னமும் நாணமுறும் !

மேலும்

தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 14-Feb-2019 8:14 am
அருமை 13-Feb-2019 10:57 pm
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா 08-Feb-2019 4:24 pm
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி நன்னாடரே 08-Feb-2019 4:23 pm
ஆழிசரன் - செ.பா.சிவராசன் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

நண்பர்களே.. தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கமும் - தமிழ்ப்பணி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டி "தலை நகரில் தமிழ்த் திருவிழா" என்னும் பெயரில் 24-02-2019 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கங்களும்,வெள்ளிப் பதக்கங்களும்,விருதுகளும் வழங்கப்பட உள்ளன. கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் போட்டியில் கலந்து கொண்டு கவித்திறனை உலகறியச்செய்து ஓங்கு புகழடைய ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறேன். இந்த ஆண்டு முதல் இலக்கியத்திற்கான 'ஐந்திணை விருது' அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் கவிதை நூல் வெளியிட்டிருப்பின் நூல்களை அனுப்பி ஐந்திணை விருதுக்கு

மேலும்

எழுத்து தள கவிஞர்களைக் கலந்து நம் கவிஞர்களின் ஆலோசனைப்படி தலை நகரில் தமிழ்த் திருவிழா போட்டி நடத்தவும் தலை நகரில் தமிழ்த் திருவிழா போட்டி சிறப்பாக நடக்க ஆவன செய்க நன்றி வாழ்த்துக்கள் 09-Feb-2019 5:29 am
இந்த மாதிரி போட்டிகளை அறிமுகம் செய்தால் எழுத்தின் மதிப்பு குறையும். 30-Jan-2019 5:32 pm
நுழைவு கட்டணம் ஆயிரம் ரூபாய் விருது கொடுக்குறீங்களா நாங்க வாங்கணுமா? 30-Jan-2019 5:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே