கிணறு வெட்ட பூதம்
தேர்தல் வருகுது
தேசம் குலுங்குது
தெய்வங்கள் வீதியிலே
வார்த்தை பெருகுது
வளர்ச்சி தெரியுது
கட்சிகள் மேடையிலே
மண்ணில் அமர்ந்து
மானிடம் சாகுது
மேலே ஆடையில்லை
தண்ணீரின்றி
தாமிரபரணி
காவிரி அழுகின்றது
தன்னிறைவென்று
தம்பட்டம் பேசி
தன்னை உயர்த்தியது
வெண்பட்டு உடுத்தி
உன் நிலம் நோக்கி
வேகமாய் வருகுது பார்
கிணறு தோண்டி
உன்னை புதைக்க
பூதம் வருகுது பார்
மந்திர சீட்டு
உந்தன் கையில்
மாயங்கள் செய்வதைப் பார்
தந்திரம் காட்டி
தரணி ஆள
தாயங்கள் உருட்டுது பார்
நாடு உயர்ந்தால்
நாமும் உயர்வோம்
நல்லவர்கள் கைகளைப் பார்
போடு ஓட்டை
பொங்கி எழுந்து
தூங்கும் சிறுபிள்ளை யார்
நாடு பெயர்ந்து
நம்மை இழப்பதில்
நன்று ஒன்றும் இல்லை
வீடு பெயர்ந்து
விட்டில் பூச்சியாய்
வீழ வாழ்வும் இல்லை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
