திருநங்கை
திருநங்கை
அழகிய கூடலில்
விதி நகர்த்திய அணுக்கள்
திசைமாறி கூடியதால்
இறைவனின் படைப்பு மாலையில்
உதிர்ந்துபோன பூக்கள்
உதிர்ந்து போன பூக்களை
உலர வைக்கும் நம் சமூக கோட்பாடு
புதுமை பெண்ணுக்கு
பா இசைத்த பாரதிகூட
இவர்களை மறந்து போனது ஆச்சரியம்தான்