விதைபட்ட எண்ணங்கள்

மனதில் புதைக்கப்பட்ட
எண்ணங்கள் எல்லாம் விதைபோல்
முட்டி முட்டி முளைக்குமென்றால்...
நம் அனைவரின் மனதிலும்
அனுபவம் என்னும்
ஆழமான வேர் ஊன்றி நிற்கும்...
நினைவுகள் எனும் கனிகள்
கனிந்து திரண்டிருக்கும்..
சுவைத்த அனைவருக்கும் - அந்த
கனிதரும் சுவைதான்
பக்குவமாக இருக்க முடியும்...
சுவைத்த எவருக்கும் - அதை
மீண்டும் விதைக்கும்
வாய்ப்பு ஏற்பட்டிருக்காது- காரணம்
அமைதி எனும் ஊட்டச்சத்து
ஆயுள்வரை போதுமானதாக இருக்கும்...

எழுதியவர் : கீர்த்தி (15-Feb-19, 12:53 pm)
சேர்த்தது : Keerthana Velayutham
பார்வை : 91

மேலே