கடவுள் சிலை பேசுகிறது

கடவுள் சிலை பேசுகிறது.
-----------------------------------------
என்னை தரிசிக்க தினமும் ஆயிரம், ஆயிரம் பேர்!

தர்ம தரிசனமும் உண்டு!
சிறப்பு கட்டண தரிசனமும் உண்டு!

அய்யர் மந்திரம் சொல்லி
கற்பூர ஆராதனை செய்யும்போது
கண்மூடி கொள்கிறீர்கள்!
கண்ணத்தில் போட்டு கொள்கிறீகள்!

கண்மூடி தான் என்னை கும்பிட வேண்டும் என்று யார் சொன்னது!ஏட்டில் எழுதி வைத்த நியதியா அல்லது சாஸ்திரம் சொல்லும் முறையா!

அப்படியே என்னை நீங்கள் பார்தாலும்
என் அணிகலன்கள், அலங்காரம் மீது உங்கள் கவனம் முழுவதும் மாறாக நான் யார், என் தத்துவம் என்ன என்று என்றுமே எண்ணியதுயில்லை!

பக்தகோடிகளே!
நான் யார்?
நான் இங்கு ஏன் வந்தேன்!
எதற்காக என்னை இங்கு நிறுவியுள்ளனர்
நான் உங்களுக்கு சொல்லும் செய்தி என்ன!

என்னை பார்த்து பல பக்தர்கள் பரவசத்தில் பாடுகிறார்கள்!
மிக்க நன்றி
பாட்டு ஏழு சுரங்களால் ஆனது!
ஆகவே அது ஏழு சுரங்களின் கூட்டு!

பல பக்தர்கள் பூ மாலை சூடுகிறார்கள்!
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
மாலை பல பூக்களால் ஆனது!
ஆகவே அது பல மலர்களின் சங்கமம்.

என்னை அழகு படுத்துவதிலும் ஆராதனை செய்வதிலும் ஈடுபட்ட நீங்கள் ஏன் என்னை ஒரு நாள் கூட உற்று நோக்கியது இல்லை!
என் தத்துவத்தை தெரிந்து கொள்ள ஆசைபடவில்லை சூட்சமத்தை உணர துடிக்கவில்லை.

மதிப்பிற்குறிய மானுடா என் வரலாறு கூறுவேன் தயவு செய்து கேள்!

நான் ஒரு பாறையில் ஒளிந்திருந்தேன் அவ்வழியே வந்த சிற்பி ஒருவன் என்னை கண்டேடுத்தான்
நான் பாறைக்குள் இருப்பதை அறிந்த அவன் என்னருகே சுத்தியுடனும், உளியுடனும் வந்தான்!
தேவையற்றதை முழுவதுமாக வெட்டினான்
செதுக்கி, செதுக்கி
என்னை கண்டேடுத்தான்
கோயிலின் சிலையாக செய்து கோயிலின் மூலஸ்தானத்தில் வைத்து என்னை தெய்வமாக்கினான்.

பக்தர்களே!
பூ மாலை போல் பூக்களின் கூட்டல் அல்ல நான் !
பா மாலை போல் ராகங்களின் குவியல் அல்ல நான்
நான் பாறையின் கழித்தல் !
ஆம் நான் கூட்டலில் உருவானவன் அல்ல கழித்தலில் உருவானவன்!
இப்போது சொல்லுங்கள் என்னை பார்த்து என்ன பாடம் கற்றுகொண்டீர்கள் !

பாறைக்குள் இருந்த நான் எப்படி வெளிச்சத்துக்கு வந்தேன்?
என் மேல் படிந்து இருந்த தேவையற்றதை அகற்றியதால்
இப்போது நிங்கள் தினமும் வணங்கும் தெய்வமாக நிற்கிறேன்.

இதில் நான் உங்களுக்கு சொல்லும் செய்தி தான் என்ன?
இன்னுமா புரியவில்லை!
இன்னுமா தெரியவில்லை!
உங்களுக்குள் கழிக்க ஏராளம் உண்டு!
உங்கள் மனதில்
உள்ள அழுக்கை அகற்றுங்கள் !
உங்களுக்குள் உள்ள குப்பைகளை நீக்குங்கள் !
ஆசை என்னும் அரக்கனை அரவே ஒழியுங்கள்!
பொறாமையை பொசுக்குங்கள்!
மனம் அமைதி பெற
உங்கள் கண்களால் இந்த உலகத்தை பாருங்கள்!
மற்றவர் கண்களால் தயவு செய்து பார்க்காதீர்கள்!
இப்படி நீங்கள் செய்தால் நீங்களும் ஆகலாம் என்னைப் போல் கடவுளாக அல்ல நல்ல மனிதனாக! மனிதம் மேம்படும்போது கடவுகளாகவும் ஆகலாம்.
-பாலு.
(மவுனம் வேறு, அமைதி வேறு)
( மவுனம் - மனிதனின் செயல்,
அமைதி - ஆன்மாவின் செயல்)

எழுதியவர் : பாலு (15-Feb-19, 1:17 pm)
பார்வை : 112

மேலே