Keerthana Velayutham - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Keerthana Velayutham |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2018 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 15 |
நான் நன்றாகத்தான் இருக்கிறேன்
என்பதை ஒவ்வொரு நொடியும்
எனக்கு நானே
நிரூபித்துக் கொண்டிருக்கிறேன்..
என் மகிழ்ச்சியின்மீது
அதீதமாக கவனம் செலுத்த
ஆரம்பித்துவிட்டேன் - காரணம்
என்னைப்பற்றி அத்தனை
நுணுக்கங்களும் தெரிந்த உனக்கு
என் சிரிப்பிற்கு பின்னால்
சில்லாகிக்கிடக்கும்
சில ரகசியங்கள்
தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக..
நான் நன்றாகத்தான் இருக்கிறேன்
எதிர்பார்த்த விஷயங்கள்தான்
ஆனாலும்
எதிர்பாராத சமயத்தில்
நடப்பதாலோ என்னவோ
அதை அதிர்ச்சியாகவே
இந்த மனம் எடுத்துக்கொள்கிறது..
அந்த தீடீர் அதிர்வலைகள்
இதயத்தைத் தாண்டி
உடலின் ஒவ்வொரு
செல்களையும் அதிரவைக்கின்றன..
நான் நன்றாகத்தான் இ
ஆமாம்.!
தனிமை அழகானதுதான்..!!
எதுவரையில்.??
வெறுமையின் சுவாரஸ்யம்
தீரும் வரையில்.!!
புதுமையான சூழலின்
ஆர்ப்பரிப்பு குறையும்வரையில்.!!
தனிமை அழகானதுதான்.!!
நடப்பவற்றையெல்லாம் அதன் போக்கில்
ஏற்றுக்கொள்ளும்வரையில்.!!
நிதர்சனத்திலிருந்து நம்மை
விலகிக்கொள்ளும்வரையில்.!!
தனிமை அழகானதுதான்.!!
பல சமயங்களில்
பயமென்ற உணர்வு
நம்மைவிட்டு நீங்கும்வரையில்.!!
நம்பிக்கை நம்மை வந்து
தீண்டும் வரையில்.!!
தனிமை அழகானதுதான்.!!
மௌனத்தின் சத்தம்
இசையாக கேட்டுக்கொண்டு
இருக்கும் வரையில்
தனிமை அழகானதுதான்.!!
பயன்படுத்தப்படாமலே விட்டுவிடும்
எந்தவொரு பொருளும்
பழுதாகிவிடும் -
உறவும்
கடவுளும் மனிதனும் வேறல்ல..
நானே கடவுள் என்பவனின் வாழ்வு நிலையல்ல..
இறைவன் உருவமற்றவனாயினும்,
உணர்வுற்றவர்..
செய்யும் செயலின் விளைவுகளே
இறைவனை உணர்த்தும்..
ஓய்வின்றி ஓடும் உன் வாழ்க்கை –
சகமனிதனின் உணர்வுகளுக்காக
ஒரு நொடி நிற்குமானால்,
அந்தநொடியில் இறைவன் அறியப்படுகிறார்..
கலக்கமுற்ற கண்களை
உன் கைகள் துடைக்கும்போது
இறைவன் உணரப்படுகிறார்..
தாழ்வுற்ற மனதை
உன் வார்த்தைகள் பலமாக்குமானால்,
உன் வார்த்தைகளில்
இறைவன் பிரதிபலிக்கிறார்..
துன்பத்தில் உள்ளவரின் கைகளை
உண்மையாய் பற்றும்போது
அந்த அன்பில்
இறைவன் வெளிப்படுகிறார்..
நம் செயல்களில்
வாழும் இறைவன்
சுதந்திரமாக உல
"நாம் சாதரணமானவர்களாக இருக்கும் போது மிக அசாதாரணமான செயல்களை செய்பவர்களாக உணர்ப்படுகிறோம்; நாம் அசாதாரணமானவர்களாக மாற முயற்சித்து செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை மிகச் சாதாரணமானவர்களாக மாற்றுகிறது.. இது ஓஷோவின் வரிகள், நான் என்னுடைய விருப்பத்திற்கு கொஞ்சம் திரித்து கூறியிருக்கிறேன். நான் ஓஷோவால் சிறிதளவு ஈர்க்கப்பட்டவள். பெரிதாக அவருடைய புத்தகங்களையோ, பேச்சுகளையோ நான் கேட்டதில்லை. இருப்பினும் என் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளோடு பெரிதும் ஒன்றிச்செல்வது அவருடைய வார்த்தைகளும், அறிவுரைகளுமே. நான் வீட்டில் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது, என் மனம் வேலையின்றிச் சோம்பேறியாக இருக்கப் பிடிக்காமல் ஏ
நிலைக்காமல் போவாயோ
என் வாழ்வில்...
நினைவில்லாமல் போவேனோ
உன் மனதில்...
கண்கள் கண்ட கனவெல்லாம்
கானல் நீராய் கரையுதடி...
காரணமின்றி வரும் கண்ணீரோ
கனலை விடவும் கொதிக்குதடி...
நினைவிருக்கிறதா என்று - நீ
சொல்லிய தேதிகள் ஒவ்வொன்றும்
என் வாழ்வின்
கருப்பு தினமானது...
உன் கண்களை நோக்கிய
என் கண்களின் ஒளியை
இருள் கொண்டு மறைப்பேனோ...
உன் விரல் இடுக்குகளை
நிரப்பிய என் விரல்களை
தழல் கொண்டு எரிப்பேனோ...
நீ சாய்ந்துவிட்டுச் சென்ற
என் தோள்கள்
தாயில்லா பிள்ளைபோல் கதறுதடி...
உன்னை உறங்கவைத்த
என் மடி - இப்போது
உறக்கமில்லாமல் தவிக்குதடி...
உன் மென்மையான
அரவணைப்பு - இப்போது
எனக்கு வெறுமையின்
உச்சத்தை காட்டுதட