இறைவன்

கடவுளும் மனிதனும் வேறல்ல..
நானே கடவுள் என்பவனின் வாழ்வு நிலையல்ல..
இறைவன் உருவமற்றவனாயினும்,
உணர்வுற்றவர்..
செய்யும் செயலின் விளைவுகளே
இறைவனை உணர்த்தும்..
ஓய்வின்றி ஓடும் உன் வாழ்க்கை –
சகமனிதனின் உணர்வுகளுக்காக
ஒரு நொடி நிற்குமானால்,
அந்தநொடியில் இறைவன் அறியப்படுகிறார்..
கலக்கமுற்ற கண்களை
உன் கைகள் துடைக்கும்போது
இறைவன் உணரப்படுகிறார்..
தாழ்வுற்ற மனதை
உன் வார்த்தைகள் பலமாக்குமானால்,
உன் வார்த்தைகளில்
இறைவன் பிரதிபலிக்கிறார்..
துன்பத்தில் உள்ளவரின் கைகளை
உண்மையாய் பற்றும்போது
அந்த அன்பில்
இறைவன் வெளிப்படுகிறார்..
நம் செயல்களில்
வாழும் இறைவன்
சுதந்திரமாக உலா வரட்டும்..

எழுதியவர் : கீர்த்தி (7-May-21, 2:50 pm)
சேர்த்தது : Keerthana Velayutham
Tanglish : iraivan
பார்வை : 45

மேலே