கொரோனாவை தடுப்போம்

கொரோனா அலைதான்
கோர தாண்டவம் ஆடுதம்மா
சுவாசத்தை தடுக்குதம்மா
உயிர்களை காவு வாங்குதம்மா
வந்த பின்னே காப்பதை விட
வருமுன் காப்பது நல்லதம்மா
முககவசம் அணிந்திடம்மா
சுவாச மண்டலத்தை காத்திடம்மா
கபசுரகுடிநீர் பருகிடம்மா
அபசுரத்தை தடுத்திடம்மா
கைகளை சோப்பினால் கழுவிடம்மா
சானிட்டைசர் உபயோகிக்க பழகிடம்மா
சுடுநீரால் தொண்டை
நனைய கொப்பளித்திடம்மா
நீராவி தினமும் நீ பிடித்திடம்மா
சத்துள்ள உணவை நீ
உண்ண வேண்டுமம்மா
உடலில் சூரிய ஒளிபட வேண்டுமம்மா
காலை மாலை உடற்பயிற்சி
செய்திட வேண்டுமம்மா
தனிமனித இடைவெளியை
கடைபிடிக்க வேண்டுமம்மா
நித்தமும் தியானம் செய்திடம்மா
நேர்மறை சிந்தனை வேண்டுமம்மா
கொரோனா தொற்றிலிருந்து
காத்திட இதனை நாளும்
கடைபிடிக்க வேண்டுமம்மா!

ஜோதி மோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (8-May-21, 10:20 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 69

மேலே