ஜோதிமோகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜோதிமோகன் |
இடம் | : புதூர் |
பிறந்த தேதி | : 03-Nov-1975 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 1144 |
புள்ளி | : 66 |
நான் ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியை. சொந்த ஊர் புதூர்(கன்யாகுமரி மாவட்டம்). மதுரை மாவட்டத்தில் பணிபுரிகிறேன். இயற்கை யின் மீது கொண்ட ஈடுபாடு கவிதை எழுத தூண்டியது. இந்த கொரோனா காலம் எனக்குள் புதைந்து கிடந்த ஆசையை தட்டி எழுப்பியது.
அன்பே! நீ இங்கில்லையதனால்
இல்லையே எனக்கு நித்திரை
நித்திரையது தொலைந்ததனால்
நீளுதே என் இரவுகள்
இரவுகளை இனிமையாக்க
இனியவனே! நீ வரவேண்டும்.
வாழ்க்கை ஓர் வட்டமா?
இல்லை சதுரமா?
இல்லை முக்கோணமா?
இல்லை இல்லை
வாழ்க்கை ஒரு ஓட்டம்
ஓடும் வரை ஓடு
குழந்தையாக
குமரி யாக,
குடும்பத்தலைவியாக
குழந்தைகளுக்கு தாயாக
குடுகுடு கிழவி யாக
ஓடிக்கொண்டே இரு
தேங்கி விடாதே
மந்தையில் மாடுகள் மேய
மாடுகள் உடலில்
காக்கை குருவிகள் மேய
காக்கை உடலில்
பூச்சிகள் மேய
தொடர்கிறது மேய்ச்சல்...
தகதகவென மின்னும்
தங்க நிற மலரே
கரிசல் காட்டில் மலர்பவளே
தை மாதம் பூப்பவளே!
தைப்பொங்கலில் பூளைப்பூவோடு
கூரைப்பூவை அலங்கரிப்பவளே
மேனி எழிலுக்கு உதவுபவளே
சமூலம் அது உன்னில் உருவாகும்
நீரழிவுக்கு மருந்தாகும்
சித்திரை வெயிலின் தாக்கம் உன்
இலையின் குளிர்ச்சியில் நீங்க
நித்திரை சுகமாய் வருமே!
பணப்பையில் பணமிருந்தால்
துணையாய் பலர் வருவர்
பணப்பையது காலியெனில்
துணையது பறந்து விடும்
காசிருந்தால் கைகூப்பி
வணங்கும் உலகம் இது
காசில்லையெனில் கைகொட்டிச்
சிரிக்கும் உலகம் இது
சலவைத்தாள் அது சாதிக்குமே
சத்தமில்லாமல் பல காரியங்களை
சலவைத்தாளுக்கு இருக்கும் மரியாதை
சக மனிதனுக்கு இங்கில்லை
அன்று பணமென்றால்
பிணமும் வாய் திறக்கும்
இன்று பிணம் எரிந்திட
பணம் வேண்டும்
தொப்புள் கொடி உறவுகள்
பெற்றோரின் தொகைக்கு தான் மரியாதை செய்கின்றனர்
விழி மொழியாவது அழகு
நாணம் நனைவது அழகு
நினைவு நிஜமாவது அழகு
இலையின் விழிம்பிள்
பனித்துளிகள் அழகு
இதயத்துடிப்பில் ஏக்கம் அழகு
பருவத்தில் பூப்பது அழகு
பாவாடை தாவானியாவது அழகு
குழந்தை குமரியாவது அழகு
குமரிக்கு குங்குமம் அழகு
கூந்தலில் குமரி அழகு
காந்தள் கண் அழகு
கார்க்கூந்தல் காற்றாய்ப் பறப்பது அழகு
பிறைக்கு நெற்றியழகு
இவளின்
பிறப்பே அழகு!
மொழியின் மோகம் அழகு
விழியின் மௌனம் அழகு
ஆணுக்கு பெண்அழகு
ஆண்மைக்கு வீரம் அழகு
மயிலின் தோகை அழகு
மைனரின் மீசை அழகு
முயலுக்கு வால் அழகு
மானின் கண்ணழகு
மையலுக்கு இருட்டழகு
பாட்டுக்கு பன் அழகு
சுதிக்கு சுரம் அழகு
சுரத்திற்கு ராக
அன்பே!
விழி வழி கணை தனை தொடுத்து
இதயத்தை கொள்ளையடித்தாய்
இதயம் துடிக்கையில் உன்
பெயரை உச்சரிக்கிறதே!
என் நினைவுகள் முழுவதும்
நீயாகி போனதால்
நிஜங்களை மறந்தேன்
கனவுகளில் நீ வந்து
கண்சிமிட்டி செல்கின்றாய்
நிஜமென்று நான் நினைத்து
தூக்கத்தில் சிரிக்கின்றேன்
துணையாய் நீ வர வேண்டும்
ஆயுள் காலம் முழுவதும்
என்னோடு.....
இனி வருங்காலங்களில் மருந்தே முதன்மையாகும்
உற்பத்தியாளர்களே நாட்டை ஆட்சியாளுவார்கள்
உயிரை முதன்மையாக்கி விலை வைக்கப்படும்.
உலகில் இனி வித வித நோய்கள் உண்டாக்கப்படும்
உணவைச் சார்ந்தே அனைத்தும் பரப்பப்படும்
உண்மைக் கூறுவோர்கள் அழிக்கப்படுவர்
ஊடகத்துறைகள் பயத்தினை எப்போதும் விதைக்கும்
விடியும் ஒவ்வொரு நாளும் நோயுள்ளதாக தோன்றும்
இதுவே சில ஆண்டுகளுக்கேனும் நிகழ்வாய் மாறும்
திரைப்பட நடிகரைப் போல் எல்லா நிகழ்வும் தோன்றும்
திருட்டும் புரட்டுமே அனைவராலும் கையாளப்படும்
தேவையில்லா உணவுகளே எங்கும் விற்கப்படும்
மக்களும் சூழலும் வசிப்பிடத்திற்கு பொருந்தாததாய்
கேடு உணவால் கெட்ட உணர்வுகள்
இனி வருங்காலங்களில் மருந்தே முதன்மையாகும்
உற்பத்தியாளர்களே நாட்டை ஆட்சியாளுவார்கள்
உயிரை முதன்மையாக்கி விலை வைக்கப்படும்.
உலகில் இனி வித வித நோய்கள் உண்டாக்கப்படும்
உணவைச் சார்ந்தே அனைத்தும் பரப்பப்படும்
உண்மைக் கூறுவோர்கள் அழிக்கப்படுவர்
ஊடகத்துறைகள் பயத்தினை எப்போதும் விதைக்கும்
விடியும் ஒவ்வொரு நாளும் நோயுள்ளதாக தோன்றும்
இதுவே சில ஆண்டுகளுக்கேனும் நிகழ்வாய் மாறும்
திரைப்பட நடிகரைப் போல் எல்லா நிகழ்வும் தோன்றும்
திருட்டும் புரட்டுமே அனைவராலும் கையாளப்படும்
தேவையில்லா உணவுகளே எங்கும் விற்கப்படும்
மக்களும் சூழலும் வசிப்பிடத்திற்கு பொருந்தாததாய்
கேடு உணவால் கெட்ட உணர்வுகள்
முகமதையே மறைத்திடவே
முகக்கவச முண்டு – அதை
முகமணிந்து கொண்டு – நாம்
முன்நடக்கக் கண்டு – உயிர்
முடிக்கவரும் பிணிப்படைகள்
முகம்சுழிப்ப துண்டு.
**
சுகமுடனே இருந்திடவே
சுயதனிமை என்று – ஒரு
சுவரெழுப்பு நன்று – உயிர்
சுடும்கிருமி நின்று – உனை
சுறுசுறுப்பாய்க் காத்திடுநீ
சுகம்பூக்கும் கன்று