விழி வழியே

அன்பே!
விழி வழி கணை தனை தொடுத்து
இதயத்தை கொள்ளையடித்தாய்
இதயம் துடிக்கையில் உன்
பெயரை உச்சரிக்கிறதே!
என் நினைவுகள் முழுவதும்
நீயாகி போனதால்
நிஜங்களை மறந்தேன்
கனவுகளில் நீ வந்து
கண்சிமிட்டி செல்கின்றாய்
நிஜமென்று நான் நினைத்து
தூக்கத்தில் சிரிக்கின்றேன்
துணையாய் நீ வர வேண்டும்
ஆயுள் காலம் முழுவதும்
என்னோடு.....

எழுதியவர் : ஜோதிமோகன் (9-Jun-21, 10:07 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : vayili valiye
பார்வை : 192

மேலே