மரணம்

நேற்றய மனிதர்
இன்று இல்லை

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவருக்குள்
உயிர்பிக்கிறது மரணம்

மரணம்
பலருக்கு செய்தி

உறவுகளுக்கு வருத்தம்

உரியவர்களுக்கு மட்டும்
ஈடு செய்ய இயலாத
மிகப்பெரிய இழப்பு

உறவுகளில் சிலர்
அக்கம் பக்கத்தில் சிலர்
தூரத்தில் நின்று கொண்டே
துயரத்தை விசாரிக்கும்
நவீன போக்கு
நாடெங்கும் நிகழ்கிறது

முக கவசம் அணிந்து கொண்டு
மூச்சுவிட பயந்துகொண்டு
பேச்சிழந்த மனிதர்களால்

ஆரவாரமில்லாமல்
அமைதியாய் நடக்கிறது
ஒரு இறுதி ஊர்வலம்.

மரணம்
தினமும் மலர்கிறது
இந்த மண்ணில்.

எழுதியவர் : இரா.ரமேஷ் (9-Jun-21, 10:20 am)
சேர்த்தது : இரா ரமேஷ்
Tanglish : maranam
பார்வை : 89

மேலே